who this our anbumani
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருப்பது போல், ஒவ்வொரு கட்சிக்கும் தனி நெகடீவ் முத்திரையும் இருப்பது சகஜம். தி.மு.க.வுக்கு 2ஜி போல, அ.தி.மு.க.வுக்கு சொத்துக்குவிப்பு வழக்கு போல், காங்கிரஸுக்கு எக்கச்சக்க சக்கஎக்க (!) ஊழல் வழக்குகள் போல பா.ம.க.வுக்கும் ‘மரம் வெட்டி கட்சி’ என்றொரு நக்கல் பெயர் நிலைத்து நிற்கிறது. பாவம், என்றோ செய்த பிழைக்கு இன்று வரை தண்டனை அனுபவிக்கிறார்கள்.
மரம் வெட்டி கட்சி எனும் பெயரை அழிக்க பா.ம.க. என்னென்னவோ முயற்சிகளை மேற்கொண்டுவந்தாலும் ‘இது அரசியல் ஸ்டண்டுடா ராமசாமி’ என்று எதிர்கட்சிகள் கமெண்ட் அடித்து காலி செய்வதும் வாடிக்கை.
இந்நிலையில் தன்னை ஒரு மாற்று அரசியல்வாதியாக நிலை நிறுத்திக் கொள்ள முயலும் அன்புமணி ராமதாஸ் தற்போது மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் பற்றி திருவாய் மலர்ந்திருக்கிறார். ‘மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிப்பதென்பது கொள்ளிக்கட்டையை எடுத்து தலை சொறிந்து கொள்வது போல்.
எனவே இந்த மாதிரியான பயிர்கள் நம் தேசத்தினுள் நுழைய மத்திய அரசு எந்த காலத்திலும் அனுமதிக்க கூடாது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை உண்பதன் மூலம் எதிர்கால சந்ததிகள் ஆரோக்கிய கேடான பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் இப்போதே உருவாகிவிடும். மிக கேடான ஒரு விஷயம் இது.
வளர்ந்த நாடுகளில் கூட மரபணு மாற்ற பயிர்களை அனுமதிப்பதில்லை. நாம் ஏன் செய்ய வேண்டும்? மரபணு மாற்ற பயிர்கள் குறித்து ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புகளை உடனே கலையுங்க.” என்று மத்திய அரசை ஆதங்கஆக கேட்டிருக்கிறார்.
அன்புமணியின் இந்த அசத்தல் அக்கறை ஸ்டேட்மெண்டை பார்த்து ஆச்சரியப்படும் எதிர் இயக்கங்கள், ‘யாரு, நம்ம அன்புமணியாய்யா இது?’ என்று கிண்டலாக ஆச்சரியம் காட்டியிருக்கின்றனர்.
நல்லது பண்ணுனா கிளாப் பண்ணுங்க பாஸு!
