தமிழக பாஜக தலைவர் யார் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தேர்வு செய்ய இன்னும் ஒருசில வாரங்கள் ஆகும். ஆகையால், இதுதொடர்பான வதந்திகளை கட்சியினர் நம்ப வேண்டாம் என்று பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜனை தெலுங்கானா மாநில ஆளுநராக செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, அந்த பதவி தொடர்ந்து காலியாக இருந்து வருகிறது. அவ்வப்போது, தமிழக பாஜக தலைவர் முருகானந்தம், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தேர்வு குறித்து இன்னும் முழுமையான தகவல் தேசிய தலைமையிடம் இருந்து வராத சூழலில் அவரவர் மன விருப்பத்திற்கு ஏற்றார்போல் வதந்திகளை பரப்பி வருவதால் இவற்றிற்கு இல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கேசவ விநாயகம் தனது முகநூல் பக்கத்தில்;- தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநிலத் தலைவர் பற்றி பல்வேறு விதமான வதந்திகளும், சித்தரிப்புகளும் கடந்த பல நாட்களாக பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப கற்பனை செய்து கொண்டு செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். இவை உண்மைக்கு மாறானவை. தமிழக பாஜக தலைவர் யார் என்று இன்னும் முடிவாகவில்லை. இதற்கு இன்னும் ஒருசில வாரங்கள் ஆகும். முடிவாகும்போது அந்ததகவல் அதிகாரப்பூர்வமாக கட்சி சார்பில் அறிவிக்கப்படும். தவறான தகவல்களை தந்து நமக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள் என கேசவ விநாயகம் தெரிவித்துள்ளார்.