வரும் 18 தேதி மாநிலங்களை எம்.பி. தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்திற்கு 6 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அதில் திமுகவுக்கு 3 எம்.பி.க்களும். அதிமுகவுக்கு 3 எம்.பி.க்களும் கிடைக்க உள்ளன.

திமுகவைப் பொறுத்தவரை ஏற்கனவே மக்களவைத் தேர்தலின்போது செய்து கொண்ட ஒப்பந்தப்படி வைகோவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு சீட்களும் தொமுச சண்முகத்துக்கும், வழக்கறிஞர் வில்சனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது,


இதே போல் அதிமுக  மக்களவைத் தேர்தலின்போது செய்து கொண்ட ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு சீட்டுகள் யாருக்கு என்ற இழுபறி அதிமுகவுக்குள் நீடித்து வருகிறது.

தம்பிதுரை, மைத்ரேயன், கே.பி.முனுசாமி, கோகுல இந்திரா என அதிமுகவில் ஒரு பெரிய லிஸ்டே உள்ளது. இதனால் யாரை  மாநிலங்களவைக்கு அனுப்புவது என் குழப்பத்தில் இபிஎஸ் – ஓபிஎஸ் உள்ளனர்.

இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்ய ஓபிஎஸ்-ஈபிஎஸ் நாளை ஆலோசனை நடத்துகின்றனர். இது தொடர்பாக நாளை அதிமுக அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்துக்கு பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.