சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அங்கு ஏராளமான பெண்கள் தரிசனம் செய்ய முற்பட்டனர். ஆனால் அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் அவர்களை கோவிலுக்கு செல்ல அனுமதி மறுத்து போராட்டம் நடத்தி வருகினறனர்.

கேரள அரசும் போலீஸ் உதவியுடன் பெண்களை கோவிலுக்குள் கொண்ட செல்ல முயற்சி செய்தது. ஆனால் பக்தர்கள் பிடிவாதமாக அவர்களை  உள்ளே விடமறுத்து வந்தனர். இதனைக் கண்டித்து நேற்று முன்தினம் கேரளாவில் 30 லட்சம் பெண்கள் பங்கேற்ற வனிதா மதில் என்ற மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அந்த சூட்டோடு சூடாக கேரள அரசு செய்த காரியம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சன்னிதானத்துக்குள்  நுழைய முறன்று திருப்பி அனுப்பட்ட பிந்து, கனகதுர்கா என்ற இரண்டு பெண்ககளை காவல் துறையை பக்தர்களின் கண்களில் மண்ணைத் தூவி நேரடியாக சன்னிதானத்துக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிந்து மற்றும் கனகதுர்கா ஆகியோர் குறித்த பின்னனி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சபரிமலைக்குச் சென்ற இரு பெண்களில் ஒருவர் பிந்து. இவரது வயது 42. கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். வழக்கறிஞரான இவர், தற்போது கண்ணூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தலசேரி பாலயட் சட்டக் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஆர்வலர்.

இன்னொரு பெண்ணான கனகதுர்கா, மலப்புரம் மாவட்டம் அங்காடிபுரத்தில் வசித்து வருகிறார். இவரது வயது 44. சிவில் சப்ளைஸ் துறையில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

கனகதுர்கா. சபரிமலை செல்லும் இவரது முடிவுக்கு, குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சபரிமலையில் உள்ள வழக்கங்களை மாற்றத் தாங்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.

இது குறித்துத் தாங்கள் கவலையாக உள்ளதாகவும், கடந்த சில நாட்களாகத் தங்கள் சகோதரியைக் காணவில்லை என்றும், போலீசாரும் அது குறித்துத் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கனகதுர்காவின் சகோதரர் பாரத் பூஷன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் முழுக்க முழுக்க கேரள அரசின் திட்டமிட்ட நாடகம் என இந்து அமைப்புகள் கொந்தளித்து வருகின்றன.