தேர்தல் கமிஷன் வேலையை ஆரம்பிப்பதற்கு முன்பே, பணப்பட்டுவாடாவிற்கான முன்னேற்பாடுகளை பக்காவாக முடித்துவிட்டார் அமைச்சர் சி.வி.சண்முகம். பறக்கும் படையின் தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக மாவட்டத்தின் முக்கிய ஊர்களுக்கு கரன்சி போய் சேர்ந்துவிட்டது. ஆளும் கட்சியின் கிளைச் செயலாளர்களை நன்றாகவே கவனித்திருக்கிறார் சி.வி.சண்முகம்,அதே சமயம் ஆளும் கட்சி மீதான அதிருப்தியால் மைனஸ் ஆகும் ஓட்டுக்களை பா.ம.க, தேமுதிகவை வைத்து  சரிக்கட்டிவிடலாம் என்ற தெம்பில் இருக்கிறார் அமைச்சர்.

விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் சண்முகத்திற்கு அரசியல் போட்டியாளராக இருப்பவர் மாஜி அமைச்சரும் திமுக. மா.செ.வுமான பொன்முடி. பொன்முடியை சமாளிப்பது வெறி ஈஸி, கடந்த 2011, 2016 எலக்ஷன் ஹிஸ்டரியை நோண்டி பார்த்தாலே புரியும் சிவியின் கெத்து என்னன்னு. விழுப்புரத்தில் பொன்முடியை காலி செய்ய சிவியை களமிறக்கினாரே, அதே எனர்ஜியில் மனுஷன் தீயா வேலைபார்த்து வருகிறார். களத்தில் இருப்பது புகழேந்தி இல்லை பொன்முடி என அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம் என பயங்கரமாக கிராமங்களில் டீமை இறக்கி விட்டுள்ளாராம். ஒருபக்கம் பாமக, மற்றொரு பக்கம் தேமுதிக நிர்வாகிகள் என ஊருக்கு மூணு கோஷ்டி ஓடி ஆடி வேலை பார்ப்பதால், மனுஷன் பயங்கர ஹேப்பியாக இருக்கிறாராம்.

இப்படி அதிமுக ஜாலியாக இருக்கும் சூழலில், சிவி சண்முகத்துக்கு  ஈடு கொடுத்து, தனது நண்பன் புகழேந்தியை ஜெயிக்க வைக்க வேண்டிய பொறுப்பு பொன்முடிக்கு அவசியமாக இருக்கிறது.  காரணம்,  ஜெகத்ரட்சகனை தொகுதிக்குள் விடக்கூடாது என்பதால் தனது நண்பனை நிற்கவைத்துள்ளார். அவர் நினைப்பது சரியாக கூட இருக்கலாம் ஆனால், தலைமைக்கு அழுத்தம் கொடுத்து சீட் வாங்கியுள்ளார். அதனால் சொந்தக்காசை போட்டு ஜெயிக்க வைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அது ஏன் சொந்த காசு? புகழேந்தி சொல்லிக்கொள்ளும் படியாக பணம் வைத்திருக்கு ஆளு இல்லை, சாதாரணமாக தான் இருக்கிறார். மிஞ்சிப்போனா நிலம், அப்படி இப்படின்னு புரட்டினால் கூட ஒரு கோடி தேறாது, அப்படி இருக்கையில் அதிமுகவுக்கு சீட்டு கொடுக்க முடியாது என நினைத்த அவரே விருப்பம் இல்லை என சொல்ல பொன்முடி வற்புறுத்தி நிற்கவைத்துள்ளார்.

நண்பனை களமிறக்கினாலும், நிர்வாகிகளுக்கு செலவு பண்ண காசு கொடுக்கனுமில்லையா? ஆனாலும் இன்னும் காசு ஏதும் கொடுக்கலையாம், கேட்டால் கொஞ்சம் பொறுங்க தலைமையிலிருந்து இன்னும் ஏதும் கைக்கு வரல நம்ம ஆளு  நாமினேஷன் பண்ணட்டும், அதுக்கு அப்புறம் சிறப்பா நடக்கும் என சொல்லி கைவிரித்துவிட்டாராம், கையில் காசு இல்லாததால் கடுப்பில் இருக்கிறார்களாம். அதிமுக வார்டு பிரதிநிதி கூட 2000 சலவை நோட்டா செலவு பண்றான், ஆனா திமுகவில் ஒன்றிய செயலாளரா இருந்தும் கூட 100 ரூவா நோட்டுக்கு வழியில்லையே என புலம்புகிறதாம் உபிக்கள்.