லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெறுவது இவர்கள் தானாம்..! 

வரும் ஏப்ரல்,மே மாதம் நடக்க உள்ள, லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களை பெற்று வெற்றி பெறுவது காங்கிரஸ் திமுக கூட்டணி தான் என பிரபல நாளிதழ் கருத்து கணிப்பை வெளியிட்டு உள்ளது.

அதன் படி, தமிழகம் மற்றும் புதுவையை பொறுத்த வரையில்,மொத்தம் உள்ள 40 இடங்களில் 36 இடங்களை திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான் பெரும் என அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதிமுக 4 இடங்களை வெல்லும் என்றும், மற்ற கட்சிகள்   தமிழகத்தில் எந்த ஒரு இடத்தை பெறுவதும் சாத்தியம் இல்லை என்றும் தற்போதைய கருத்து கணிப்புப்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பல்வேறு ஆங்கில ஊடகங்களும் இதே போன்ற பல கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.  தேர்தலுக்கு இன்னும்  நான்கு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இது போன்ற கருத்து கணிப்புகள் அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனித்து பார்க்கப்படுகிறது.

மேலும், பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்க உள்ள பட்ஜெட்டில், மத்தியில் ஆளும் பாஜக பல முக்கிய சலுகைகளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.