Who is Dinakaran support MLAs
சசிகலாவுக்கு எதிராக ஒ.பி.எஸ் போர்க்கொடி தூக்கியபோது எப்பாடு பட்டாவது எடப்பாடியை முதலமைச்சராக தேர்வு செய்து விட வேண்டும் என எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் தங்கவைத்தனர்.
அப்போது எடாப்படி ஆட்சி வந்தால் உங்களுக்கு தேவையானதை அவர் செய்வார் எனவும் வாக்குறுதி அளித்துள்ளனர். இதனால் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எடபாடிக்கு வாக்கு அளித்தனர்.
இதைதொடர்ந்து கூவதூரில் வாக்களித்தவற்றை எடப்பாடி அரசு செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த எடப்பாடி சில நாட்களுக்கு முன்பு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 8 பேரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வந்த செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் உடனே எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து இரட்டை இலை விவகாரத்தில் சிறைக்கு சென்று ஜாமீனில் திரும்பிய தினகரனை அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடிக்கு எதிராக தினகரனிடம் ஆதரவாகும் எம்.எல்.ஏக்கள் பட்டியல் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதுவரை 21 எம்.எல்.ஏக்கள் டிடிவி தினகரனிடம் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் எடப்பாடி அணி கதி கலங்கி போயுள்ளது. அவர்களின் பட்டியல் கீழே வருமாறு...
1. பெரம்பூர் வெற்றிவேல்
2.ஆண்டிப்பட்டி தங்கதமிழ்செல்வன்
3.சாத்தூர் சுப்ரமணியன்
4.கம்பம் ஜக்கையன்
5.பெரியகுளம் கதிர்காமு
6.சோளிஞர் பார்த்திபன்
7.நிலக்கோட்டை தங்கதுரை
8.ஆம்பூர் பாலு
9.குடியாத்தம் ஜெயந்தி
10.ராதாபுரம் இன்பதுரை
11.பூந்தமல்லி ஏழுமலை
12.மதுரை வடக்கு ராஜன் செல்லப்பா
13.பரமக்குடி முத்தையா
14.அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி
15.தோப்பு வெங்கடாசலம்
16.பழனியப்பன் பாப்பிரெட்டிபட்டி
17.மோகன் செய்யாறு
18.கலசப்பக்கம் பன்னீர் செல்வம்
19.மாரியப்பன் கென்னடி மானாமதுரை
20. விளாத்திகுளம் எம்.எல்.ஏ உமா மகேஸ்வரி
21. அரூர் முருகன்
எடப்பாடி ஆட்சி கவிழும் நிலையில் உள்ளதாகவும், இன்னும் சில எம்.எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
