Asianet News TamilAsianet News Tamil

ஊரடங்கை மீறுபவர்களிடம் யார் அபராதம் வசூலிக்கலாம்: தமிழக அரசு விளக்கம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்டு வந்த பொது முடக்கம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத சூழலில் தனி மனித இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Who can charge fines for violating the curfew: Tamil Nadu government explanation!
Author
Tamil Nadu, First Published Sep 8, 2020, 11:24 PM IST

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்டு வந்த பொது முடக்கம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத சூழலில் தனி மனித இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Who can charge fines for violating the curfew: Tamil Nadu government explanation!

பொது இடங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்;கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்;என அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும், தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் அதுதொடர்பான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டும் வருகிறது.

 இதனால் பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் மேற்கொள்ளபட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று இன்னும் அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, கொரோனா விதிமுறைகளான பொது இடங்களில் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் பொது சுகாதார சட்டத்தில் புதிய விதிகளை சேர்த்து. தமிழக அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளி உள்ளிட்ட விதிகளை மீறுவது குற்றம் என கூறும் அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்.அளித்துள்ளார்.

Who can charge fines for violating the curfew: Tamil Nadu government explanation!

கொரோனா தடுப்பு விதியை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கவும், விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராடஹ்ம் விதித்து சட்ட நடவடிக்கை எடுக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.500, முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அபராத நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன.
 
Follow Us:
Download App:
  • android
  • ios