Asianet News TamilAsianet News Tamil

சென்னை அரசு பங்களாவில் குடியேற போகும் அமைச்சர்கள் யார் யார்..? இதோ அந்தப் பட்டியல்..!

சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களா குடியிருப்பில் 30 அமைச்சர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 

Who are the ministers who are going to settle in Chennai Government Bungalow ..? Here is the list ..!
Author
Chennai, First Published May 22, 2021, 9:46 PM IST

சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் தமிழக அமைச்சர்களுக்கான அரசு பங்களாக்கள் உள்ளன. தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுக மாஜி அமைச்சர்கள் இந்த பங்களாவை விட்டு காலி செய்யத் தொடங்கினர். காலி செய்யப்பட்ட பங்களாக்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 30 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி எந்தெந்த பங்களாக்கள் எந்த அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரம் வருமாறு:
1. சூரியகாந்தி இல்லம் - இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. முன்பு கே.பி.அன்பழகன் வசித்த இல்லம். Who are the ministers who are going to settle in Chennai Government Bungalow ..? Here is the list ..!
2. செண்பகம் இல்லம் - வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். முன்பு வெல்லமண்டி நடராஜன் வசித்த இல்லம்.
3. செந்தாமரை இல்லம் - செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன். முன்பு எம்.ஆர்.விஜயபாஸ்கர் வசித்த இல்லம்.
4. சாமந்தி இல்லம் - சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன். முன்பு துரைக்கண்ணு வசித்த இல்லம். 
5. செவ்வந்தி இல்லம் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கு முன்பும் எடப்பாடி பழனிசாமியே இங்கு வசித்தார். 
6. ரோஜா இல்லம் - கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. முன்பு எஸ்.பி.வேலுமணி வசித்த இல்லம்.
7. சிறுவாணி இல்லம் - சட்ட அமைச்சர் ரகுபதி. முன்பு ராஜேந்திரபாலாஜி வசித்த இல்லம்.
8. தாமிரபரணி இல்லம் - ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன். முன்பு கடம்பூர் ராஜு வசித்த இல்லம்.Who are the ministers who are going to settle in Chennai Government Bungalow ..? Here is the list ..!
9. வைகை இல்லம் - வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி. முன்பு சி.வி. சண்முகம் வசித்த இல்லம்.
10. மனோரஞ்சிதம் இல்லம் - ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன். முன்பு தங்கமணி வசித்த இல்லம். 
11. முல்லை இல்லம் - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. முன்பு திண்டுக்கல் சீனிவாசன் வசித்த இல்லம்.
12. தென்பெண்ணை இல்லம் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. முன்பு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வசித்த இல்லம்.
13. காவேரி இல்லம்- உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி. முன்பு விஜயபாஸ்கர் வசித்த இல்லம்.
14. காவேரி இல்ல வளாகம் - துணை சபாநாயகர் பிச்சாண்டி. முன்பு ஓ.எஸ்.மணியன் வசித்த இல்லம்.
15. காவேரி இல்ல வளாகம் - மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். முன்பு கே.சி.வீரமணி வசித்த இல்லம்.
16. எழில் இல்லம் - நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். முன்பு செல்லூர் ராஜூ வசித்த இல்லம்.
17. குறிஞ்சி இல்லம் - சபாநாயகர் அப்பாவு. முன்பு ப. தனபால் வசித்த இல்லம். Who are the ministers who are going to settle in Chennai Government Bungalow ..? Here is the list ..!
18. அன்பு இல்லம் - வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். முன்பு எம்.சி.சம்பத் வசித்த இல்லம்.
19. திருவரங்கம் இல்லம் - தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. முன்பு காமராஜ் வசித்த இல்லம்.
20. திருவரங்கம் இல்ல வளாகம் - பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர். முன்பு நிலோபர் கபில் வசித்த இல்லம்.
21. திருவரங்கம் இல்ல வளாகம் - அரசு கொறடா கோவி.செழியன். முன்பு சரோஜா வசித்த இல்லம். 
22. திருவரங்கம் இல்ல வளாகம் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ். முன்பு வளர்மதி வசித்த இல்லம்.
23. திருவரங்கம் இல்ல வளாகம் - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். முன்பு ராஜலட்சுமி வசித்த இல்லம்.
24. திருவரங்கம் இல்ல வளாகம் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன். முன்பு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன். 
25. திருவரங்கம் இல்ல வளாகம் - சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான். முன்பு சேவூர் ராமச்சந்திரன் வசித்த இல்லம். 
26. திருவரங்கம் இல்ல வளாகம் - வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி. முன்பு அரசு கொறடா ராஜேந்திரன் வசித்த இல்லம்.
27. திருவரங்கம் இல்ல வளாகம் - போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன். முன்ஊ துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வசித்த இல்லம்.

Who are the ministers who are going to settle in Chennai Government Bungalow ..? Here is the list ..!
28. திருவரங்கம் இல்ல வளாகம் - வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன். முன்பு பாஸ்கரன் வசித்த இல்லம்.
29. திருவரங்கம் இல்ல வளாகம் - காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன். முன்பு உடுமலை ராதாகிருஷ்ணன் வசித்த இல்லம்.
30. திருவரங்கம் இல்ல வளாகம் - கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி. முன்பு மணிகண்டன் வசித்த இல்லம்.
அரசு பங்களாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோருக்கு ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios