திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை, கோவில்பட்டி, திண்டுக்கல், அரூர், கீழ்வேளூர் என 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்தத் தொகுதிகளில்  வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை அக்கட்சியின் தமிழக செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இதன்படி திருப்பரங்குன்றம் தொகுதியில் பொன்னுத்தாய், கந்தர்வக்கோட்டை தனித் தொகுதியில் எம்.சின்னதுரை, கோவில்பட்டி தொகுதியில் கே.சீனிவாசன், திண்டுக்கல் தொகுதியில் பாண்டி, அரூர் தொகுதியில் குமார், கீழ்வேளூர் தொகுதியில் நாகை மாலி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “சிபிஎம்மின் 6 வேட்பாளர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக வெற்றிபெறுவார்கள். இத்தேர்தலில் அகில இந்திய மற்றும் மாநில தலைவர்கள் பரப்புரையில் ஈடுபடுவார்கள்” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.