Asianet News TamilAsianet News Tamil

டெல்டாவில் யார் கை ஓங்குகிறது? இபிஎஸ்-ஐ முந்துகிறாரா ஓபிஎஸ்? யார் எந்த பக்கம்? பரபரப்பு தகவல்கள்.!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் ஆள் பிடிக்கும் படத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏ, எம்பிக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் எடப்பாடி பக்கமே உள்ளனர்.

Which side is the Delta AIADMk on? Sensational information
Author
Tamil Nadu, First Published Jun 20, 2022, 7:14 AM IST

ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், தஞ்சை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் யார் கை ஓங்குகிறது என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பற்றி எரியும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாறி மாறி தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் தங்களுடைய ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால்,  இந்த முறை என்ன நடந்தாலும் விட்டுக்கொடுப்பதாக இல்லை என்ற முடிவில் ஓபிஎஸ் இருந்து வருகிறார். ஆகையால், எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை என்ற கோஷத்திற்கு ஓபிஎஸ் இடையூறாக இருந்து வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் சமரச முயற்சிக்கு உடன்படவில்லை. 

Which side is the Delta AIADMk on? Sensational information

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் ஆள் பிடிக்கும் படத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏ, எம்பிக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் எடப்பாடி பக்கமே உள்ளனர். ஓபிஎஸ் தரப்பில் விரல் விட்டு என்னக்கூடிய அளவிற்கு நிர்வாகிகள் உள்ளனர். ஆனால், மக்களின் செல்வாக்கு ஓபிஎஸ்க்கு உள்ளது. 

இந்நிலையில், ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆள் பிடிக்கும் படலம் ஜரூராக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் நகர்மன்ற தலைவர் ராஜசேகர் மட்டும் ஓபிஎஸ் பக்கம் உள்ளார். முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் இபிஎஸ் பக்கம் உள்ளனர்.

Which side is the Delta AIADMk on? Sensational information

நாகை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் இபிஎஸ்சை ஆதரிக்கின்றனர். ஏற்கனவே ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது, அவர் பக்கம் முன்னாள் அமைச்சர் ஜெயபால் சென்றார். ஆனால், இப்போது மதில்மேல் பூனையாக உள்ளார். திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான காமராஜ் சொல்வது தான். அவர், இபிஎஸ் பக்கம் இருப்பதால், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் இபிஎஸ் பக்கமே திரண்டுள்ளனர்.

கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் ஓபிஎஸ் பக்கம் உள்ளார். இவர் சொல்வதை தான் தஞ்சையில் உள்ள அதிமுக நிர்வாகிகள் கேட்பார்கள். இதனால் தஞ்சை மாவட்டம் முழுவதும் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துள்ளது. கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், இபிஎஸ் பக்கம் உள்ளார். இந்த மாவட்ட நிர்வாகிகள் பெரும்பாலானோர் இபிஎஸ் பக்கமே உள்ளனர்.

Which side is the Delta AIADMk on? Sensational information

மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் பாரதி, சந்திரமோகன், சக்தி, ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் இபிஎஸ் ஆதரவாளர்களாக உள்ளனர். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், ஓபிஎஸ்சை ஆதரிக்கிறார். அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் இபிஎஸ் பக்கம் உள்ளனர். திருச்சியில் வடக்கு, தெற்கு, மாநகர் என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி இபிஎஸ் பக்கமும், முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ் பக்கமும் உள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சிவபதி மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன் ஆகியோரும் எடப்பாடிக்கு கைகொடுத்துள்ளனர். அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக ஒரு கோஷ்டி செயல்படுவது அந்தக் கட்சியில் எப்போதுமே சகஜமாகும். அந்த கோஷ்டியினரை வளைத்துப் பிடிக்க ஓபிஎஸ் தரப்பு முயற்சிக்கிறது. அதே நேரத்தில் எதிர் கோஷ்டியை சரிகட்ட இபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களும்  முயற்சி எடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க;- இரட்டை இலையை முடக்கிவிடுவேன்.. இப்படி மிரட்டாதீங்க ஓபிஎஸ்.! ரகசியத்தை உடைத்த அதிமுக பிரமுகர்

Follow Us:
Download App:
  • android
  • ios