அரசியலில் ஈடுபடமாட்டேன் என ரஜினி திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியன் ரஜி நி யாருக்கு ஆதரவு தருவார் என விளக்கமளித்துள்ளார்.
அரசியலில் ஈடுபடமாட்டேன் என ரஜினி திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியன் ரஜி நி யாருக்கு ஆதரவு தருவார் என விளக்கமளித்துள்ளார்.
கோவையில் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் 37 வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த 85 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் தலைவராக தொடர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் முக்கிய பதவிகளுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். காந்திய மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களை அடுத்த ஆறு மாதத்தில் 10 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
ரஜினி மக்கள் மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கம் இணைக்கப்படவுள்ளதாக வந்த செய்தியை காந்திய மக்கள் இயக்கம் மறுத்துள்ளது. இது தொடர்பாக அதன் பொதுச் செயலாளர் பா.குமரய்யா வெளியிட்ட அறிக்கையில், “சில செய்தி காட்சி ஊடகங்களில் காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பதாக வந்த செய்தி கற்பனையானது. காந்திய இயக்கம் தனித்து இயங்கும். ரஜினி மக்கள் மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கத்தின் தொடர்பு சகோதர பாவத்துடன் நீடிக்கும்” என தெரிவித்துள்ளார்.
ரஜினி பின்வாங்கிய பிறகு இனி இறக்கும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன் என சொன்ன தமிழருவி மணியன் மீண்டும் தனது இயக்கப் பணிகளை தொடங்கியிருப்பது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் ரஜினி ஆதரவு யாருக்கு என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழருவி மணியன், ‘’ரஜினி கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அதே போல் அவர் எந்தக் கட்சிக்கும் ஆதரவும் தெரிவிக்க மாட்டார்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
Last Updated Jan 11, 2021, 1:21 PM IST