Where will Sasikala come on parole?
சசிகலாவுக்கு பரோல் கிடைத்து வெளியே வந்தால், இளவரசி அல்லது டிடிவி தினகரன் வீட்டில் தங்குவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. போயஸ் தோட்ட இல்லம் அரசுடமையாக்கப்பட்டுள்ள நிலையில் சசிகலா வெளியே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக் குறைவு காரணமாக தாம்பரம் அடுத்துள்ள மேடவாக்கம் அருகே குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழந்ததாகவும், அது குறித்து சிறுநீரகங்கள், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
உறுப்பு மாற்று சிகிச்சைக்காக கல்லீரல் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகவும் நேற்று டிடிவி தினகரன் கூறியிருந்தார். நேற்று இரவு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து
கவலைக்கிடமாக உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் கணவர் நடராசனைப் பார்ப்பதற்காக, சிறையில் இருக்கும் சசிகலா சார்பில் பரோலுக்காக சிறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார்.
சசிகலா பரோலில் வெளிவருது குறித்து இன்று மாலை தெரியும் என்று கூறப்படுகிறது. அப்படி பரோலில் வெளிவரும் சசிகலா, இளவரசி மற்றும் டிடிவி தினகரன் இல்லத்தில் தங்கலாம் என்றும் தெரிகிறது.
ஜெயலலிதா இறப்புக்கு முன்பாக, சென்னையில் உள்ள போயஸ் இல்லத்தில் சசிகலா தங்கியிருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசுடமையாக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் சசிகலா பரோல் கிடைத்து வெளியே வந்தால், அவர் எங்கு தங்குவார் என்ற கேள்வி எழுந்தது. சசிகலா போயஸ் இல்லத்துக்கு செல்லாமல் இளவரசி மற்றும் டிடிவி தினகரன் இல்லத்தில் தங்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
