Asianet News TamilAsianet News Tamil

அதை பார்க்கும்போது நெஞ்சு பதைபதைக்கிறது.. யாராக இருந்தாலும் விடக்கூடாது.. கொதிக்கும் எடப்பாடி பழனிச்சாமி.

இதை சற்றும் எதிர்பாராத அவருடைய மனைவி அழுதபடியே தன்னுடைய கணவரை காப்பாற்ற முயன்ற போது, நோயாளி துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்து விடுகிறார்கள் என்றும், ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வலம் வருவதைப் பார்க்கும்போது நெஞ்சு பதைபதைக்கிறது.  இவ்வளவு பெரிய ஒரு கொடூரமான சம்பவம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று காலையில் நடந்துள்ளது.
 

When you see it, your heart is pounding .. No matter who you are .. Boiling Edappadi Palanichamy.
Author
Chennai, First Published May 21, 2021, 12:06 PM IST

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி நடு வீதியில் வசித்து வந்த திரு.கண்ணன் முதலியார் என்பவருடைய மகன் ராஜா அவர்கள் (வயது 49) கொரோனா தொற்று காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு, கடந்த 8ஆம் தேதி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், நேற்று காலை வரை அவருக்கு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார்கள். 

When you see it, your heart is pounding .. No matter who you are .. Boiling Edappadi Palanichamy.

இந்நிலையில், நேற்று 20-5-2021 காலை சுமார் 9 மணி அளவில் நோயாளி காலை உணவு அருந்தும் போது, அங்கு வந்த பணியில் இருந்த அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அவருடைய வென்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு வெளியேற முற்பட்டனர் என்றும், அதைத் தடுக்க முயன்ற அவருடைய மனைவியை (திருமதி கஸ்தூரி) தடுத்துவிட்டு வென்டிலேட்டர்  மிஷின் மற்றும் ஆக்ஸிஜனை எடுத்துச் சென்றுவிட்டனர் என்றும், அவரது மனைவி புகார் செய்துள்ளார்.

மேலும் போராடிய அவருடைய மனைவியை கீழே தள்ளி விட்டனர் என்றும், இதை சற்றும் எதிர்பாராத அவருடைய மனைவி அழுதபடியே தன்னுடைய கணவரை காப்பாற்ற முயன்ற போது, நோயாளி துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்து விடுகிறார்கள் என்றும், ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வலம் வருவதைப் பார்க்கும்போது நெஞ்சு பதைபதைக்கிறது.  இவ்வளவு பெரிய ஒரு கொடூரமான சம்பவம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று காலையில் நடந்துள்ளது. 

When you see it, your heart is pounding .. No matter who you are .. Boiling Edappadi Palanichamy.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது, இதனை விரைந்து விசாரித்து தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.  என தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios