Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது? முதல்வரிடம் அறிக்கையை சமர்பித்த அமைச்சர்..!

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த 14ம் தேதி ஆலோசனை நடத்தினார். இதில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.

When will the schools from 1st to 8th class open in Tamil Nadu?
Author
Chennai, First Published Sep 16, 2021, 4:50 PM IST

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது தொடர்பான அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்ததையடுத்து 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த 14ம் தேதி ஆலோசனை நடத்தினார். இதில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டனர். 

When will the schools from 1st to 8th class open in Tamil Nadu?

இதில், சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முதற்கட்டமாக  6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என்றும் சிலர் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை திறக்கலாம் என்றும் இருவேறு கருத்துகளை தெரிவித்திருந்தனர். 

When will the schools from 1st to 8th class open in Tamil Nadu?

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அளித்த கருத்துக்களையும் தொகுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அதில், 6 முதல் 8 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என அதில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அன்பில் மகேஷ கூறுகையில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை திறப்பது தொடர்பான இறுதி முடிவை முதலமைச்சரே எடுப்பார் என தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios