முதல் மற்றும் 3-ம் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்;- 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மீண்டும் டிஆர்பி தேர்வு எழுத வாய்ப்பளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழக பட்ஜெட்டில் இந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும், முதல் மற்றும் 3-ம் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி முதலமைச்சரின் ஒப்புதல் பெற்று விரைவில் அறிவிக்கப்படும். உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை. உருது படித்த ஆசிரியர்கள் தேவை எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.