Asianet News TamilAsianet News Tamil

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது? அமைச்சர் சக்கரபாணி சொன்ன முக்கிய தகவல்..!

கடல் வழியாக ரேஷன் பொருள் கடத்தலை தடுக்க கடலோர காவல்படையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற தொகுதி வாரியாக முகாம் நடத்தி குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

When is Rs.1000 per month for family heads? minister sakkarapani information
Author
Tamil Nadu, First Published Jul 14, 2021, 4:20 PM IST

கடல் வழியாக ரேஷன் பொருள் கடத்தலை தடுக்க கடலோர காவல்படையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு தேர்தலுக்கு முன்பு பெண்களை மையப்படுத்தி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது. இந்த திட்டங்களில் பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம், மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் முக்கியமாக உள்ளது. இதில் நகர பெருந்தில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குடும்பதலைவிகளுக்கு  ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அது குறித்து தற்போது வரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. 

When is Rs.1000 per month for family heads? minister sakkarapani information

இந்நிலையில்,  உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நிதிநிலைக்கு ஏற்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

When is Rs.1000 per month for family heads? minister sakkarapani information

மேலும், கடல் வழியாக ரேஷன் பொருள் கடத்தலை தடுக்க கடலோர காவல்படையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற தொகுதி வாரியாக முகாம் நடத்தி குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios