உள்ளாட்சி தேர்தல் எப்போது..? தேர்தல் ஆணையம் புதிய  அறிவிப்பு..! 

மே கடைசி வாரத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் என தேர்தல் மாநில ஆணையம், பதில் அளித்துள்ளது..
வார்டு வரையரை  பணிகள் முடிந்து விட்டதால் தேர்தல் நடத்தப்படும்  என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

வார்டு சுழற்சி, இடம் ஒதுக்கீடு பணிகள் 90  நாட்களில் முடிக்கப்படும் என்றும் மானிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆணையத்தின் விளக்கத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உள்ளது

மேலும், வார்டு வரையறை தொடர்பான அறிக்கையை ஜனவரி 28 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளது தேர்தல் ஆணையம் 

2017  நவம்பர் 17 ஆம்  தேதிக்குள் தேர்தல் நடத்த முடியாது என அவகாசம் கேட்ட தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன என்பதை, வரும் 28 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு உள்ளனர்.

மேலும் இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவின் நிலைப்பாடு என்ன என்பதையும் வரும் 28 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளது.