தமிழகத்தில் செப்டம்பர் 21ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக  அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் செப்டம்பர்  21ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 நாளிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்.

மேலும், கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.