ரஜினியை பின்னாலிருந்து இயக்குவது ஆர்.எஸ்.எஸ் எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

ரஜினியை பின்னாலிருந்து இயக்குவது ஆர்.எஸ்.எஸ் எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படியே இருந்தால் என்ன? ஆர்.எஸ்.எஸ் என்ன பயங்கரவாத அமைப்பா? ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எங்கு குண்டு வைத்தார்கள்? சங்பரிவார் என்ன பயங்கரவாத கட்சியா? எங்கேயும் குண்டு வைத்து ரயிலை கவிழ்த்தார்களா? மகாத்மா காந்தியை கொன்றது ஒரு லொலையாளி.

 

அதுல எதுக்கு ஆர்.எஸ்.எஸை இழுக்கிறீர்கள்?  எஸ்.ஐ.வில்சனை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்தனர். அதற்காக முஸ்லீம்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று சொன்னால் சரியாக இருக்குமா? மகாத்மா காந்தியை கொலை செய்தது கோட்சே. அவனை கொலையாளியாகத்தான் பார்க்கணும்.  ஆர்.எஸ்.எஸ். அல்ல. எனவே கோட்சேவைத் தான் கொலையாளியாக பார்க்க வேண்டும்.

 

கோயிலுக்கு சாமி கும்பிடச் செல்பவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.,காரர்களா? எதெற்கெடுத்தாலும் ஆர்.எஸ்.எஸ் பின்னணி இருக்கு... சங்க்பரிவார் தூண்டி விடுகிறது எனச் சொல்லக்கூடாது. அப்ப கோயில்ல சாமி கும்பிடுபவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.,காரனா? இல்ல ஆர்.எஸ்.எஸ்காரன் தப்பு எதுவும் பண்ணிட்டானா சொல்லுங்க’’என அவர் பேசியுள்ளார்.