Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை உள்ளே விட்டுவிட்டு, ஊரடங்கு போட்ட உள்நோக்கம் என்ன..? மத்திய அரசு மீது சந்தேகம் கிளப்பும் ஸ்டாலின்.!

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியதற்கு என்ன காரணம் என்பதைக் காலம் உரிய கட்டத்தில் சுட்டிக்காட்டும். 

What's the motive behind leaving Corona? Stalin cast doubt on central government
Author
Tamil Nadu, First Published Apr 7, 2020, 1:44 PM IST

க்களின் நல்வாழ்வுக்கு கூடுதல் நிதி ஒதுக்காமல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியையும் பறிப்பது நெருக்கடியில் நிறுத்துவதற்கு ஒப்பானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.What's the motive behind leaving Corona? Stalin cast doubt on central government

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மனிதகுல வரலாற்றின் மாபெரும் துயரம் என்று சொல்லக்கூடிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். சீனாவிலிருந்து பரவி, இன்றைய தினம் உலகின் பல்வேறு நாடுகளிலும் புகுந்திருக்கும் கொரோனா எனப்படும் வைரஸ் நோயால், இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,281 ஆகிவிட்டது. 111 உயிர்களை இழந்துள்ளோம். தமிழகத்தைப் பொருத்தவரையில் 621 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். 6 உயிர்களை இழந்திருக்கிறோம். இன்னும் இந்த எண்ணிக்கை எந்த அளவுக்கு இழுத்துச் செல்லுமோ, இழப்புகளும் இன்னல்களும் எத்தனை தூரம் நீளுமோ, என்ற பதற்றம் துளியும் தணிந்தபாடில்லை.What's the motive behind leaving Corona? Stalin cast doubt on central government

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா தொற்று சீனாவிலிருந்து பரவிய காலத்திலேயே, அதாவது ஜனவரி மாதத் தொடக்கத்திலேயே, இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்குமானால், இந்தியாவுக்கு இத்தகைய மோசமான நிலைமை ஏற்பட்டு இருக்காது. மார்ச் மாதம் இரண்டாவது வாரம் வரைக்கும் மத்திய - மாநில அரசுகள் காட்டிய அலட்சியம்தான் இந்த அவலமான சூழ்நிலைக்குக் காரணம் என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்; அனைவரும் உணர்ந்துதான் ஆகவேண்டும்.What's the motive behind leaving Corona? Stalin cast doubt on central government

கொரோனா தொற்றை மார்ச் இரண்டாவது வாரம் வரைக்கும் உள்ளே அனுமதித்துவிட்டு, அதன்பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியதற்கு என்ன காரணம் என்பதைக் காலம் உரிய கட்டத்தில் சுட்டிக்காட்டும். இதைத்தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளாவது முறையானதாக இருக்கின்றனவா? என்பது கேள்விக்குறியாகி வருகிறது’’ என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios