பெண்களுக்கு மாதம் 1000 வாக்குறுதி என்னாச்சு.. திமுகவின் சட்டையை பிடித்து உலுக்கும் வானதி சீனிவாசம்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது ஏனா திமுக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது ஏனா திமுக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு இப்போது மக்களை திமுக அரசை ஏமாற்றி வருகிறது என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதாக பாஜகவினர் அறிவித்தனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது, இதேபோல் பல்வேறு முக்கிய இடங்களில் பாஜக தலைவர்களின் தலைமையில் உண்ணாவிரம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: அதிமுக பொதுக்குழு விவகாரம்... ஈபிஎஸ்-இன் மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை!!
அதேபோல் கோவை சிவானந்தா காலனியில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் உரையாற்றிய வானதி சீனிவாசன், திமுக அரசை சரமாரியாக விமர்சித்தார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது, ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் நிறைவடைந்துள்ள நிலையில் கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றப்படவில்லை,
இதையும் படியுங்கள்: நுபுர் சர்மா மீதான உச்ச நீதி மன்றத்தின் கருத்துக்கு எதிராக 15 முன்னாள் நீதிபதிகள் கொந்தளிப்பு.. பகீர் கடிதம்.
பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு இரண்டு முறை குறைத்துவிட்டது, பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆளும் திமுக அரசு அதற்கான வரி குறைப்பு செய்யவில்லை, இப்படி தொடர்ந்து மக்களை வஞ்சித்து, ஏமாற்றி வருகிறது. இதேபோல் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக லாக்கப் மரணங்கள் அதிகரித்துள்ளன, மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என தேர்தலின்போது முதல்வர் முகஸ்டாலின் அறிவித்தார். ஆனால் அந்த வாக்குறுதி இதுவரையிலும் நிறைவேற்றப்படவில்லை,
அதிமுக ஆட்சியில் இருந்த பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு திமுக அரசு நிறுத்தியுள்ளது. தாலிக்கு தங்கம் திட்டம், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் திட்டம் போன்றவை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கோவையில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. கோவையில் சுமாட் சிட்டி பணிகள் துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.