Asianet News TamilAsianet News Tamil

பெட்ரோல் விலையை குறைச்சீங்களே டீசல் விலை என்னாச்சு... அதிமுக எம்.எல்.ஏ., கேள்வி..!

தி.மு.க அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது.
 

What is the diesel price to reduce petrol prices ... AIADMK MLA, question ..!
Author
Tamil Nadu, First Published Aug 17, 2021, 1:56 PM IST

அ.தி.மு.க ஆட்சியில் மூன்று முறை பெட்ரோல், டீசல் வரி உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தி.மு.க அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது.

What is the diesel price to reduce petrol prices ... AIADMK MLA, question ..!

இந்த விவாதத்தின் போது, அ.தி.மு.க உறுப்பினர் ராஜன் செல்லப்பா, "பெட்ரோல் விலையைக் குறைத்த தி.மு.க அரசு, டீசல் விலையைக் குறைக்கவில்லை. இதனால் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "அ.தி.மு.க ஆட்சியில் மூன்று முறை பெட்ரோல், டீசல் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், முந்தைய தி.மு.க ஆட்சியில் 4 முறை பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.What is the diesel price to reduce petrol prices ... AIADMK MLA, question ..!

தி.மு.க அரசு பெட்ரோல் மீதான வரியைக் குறைத்ததால், பெட்ரோல் பயன்படுத்தும் 2 கோடி பேர் நேரடியாகப் பயன் பெறுகின்றனர். பத்து லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலான வாகனங்கள் டீசலை பயன்படுத்தி வருகின்றன. டீசல் விலையைக் குறைப்பது தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. டீசல் அதிகம் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்துத் துறைக்கு மானியம் கூடுதலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மீனவர்களுக்கும் கூடுதலாக டீசல் மானியம் வழங்க முடிவு செய்து இருக்கிறோம். சமூக நீதி, பொருளாதார நீதியை நிலைநாட்டத் தமிழ்நாடு அரசு தினந்தோறும் பணியாற்றி வருகிறது" எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios