தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகிவிடும் என்பதை அடுத்தடுத்த சம்பவங்கள் உண்மையாக்கி வருகின்றன. காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகிவிடும் என்பதை அடுத்தடுத்த சம்பவங்கள் உண்மையாக்கி வருகின்றன என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
கோவில் திருவிழா
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த பழவூர் கிராமத்தில் கோயில் கொடை விழா நடைபெற்றது. இந்த கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசா உள்ளிட்ட காவலர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பக்தர்களை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டதை காவல் துறையினர் அகற்ற முயன்ற போது ஆறுமுகம் என்பவர் பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார்.

இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலிருந்த காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால், அவர்களால் மக்களை எப்படி பாதுகாக்க முடியும்? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- திருநெல்வேலி அருகே காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வி. மார்கரெட் தெரசா கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலிருந்த காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால், அவர்களால் மக்களை எப்படி பாதுகாக்க முடியும்?

சட்டம்-ஒழுங்கு
தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகிவிடும் என்பதை அடுத்தடுத்த சம்பவங்கள் உண்மையாக்கி வருகின்றன. காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
