நடிகர் ரஜினிகாந்த் அரசியல்வாதி கிடையாது. அவன் நடிகர் தான் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவதற்கு காந்தியவாதி தமிழருவி மணியன் ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பத்தையும் துவம்சம் செய்துள்ளார்.

 

தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், ‘’ரஜினிகாந்த் எந்த ஒரு கருத்தையும் பேசாமல் அமைதியாக இருந்திருந்தால் ரஜினி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் என குறை கூறுகிறார்கள். தற்போது பெரியாரைப் பற்றி ரஜினிகாந்த் பேசியதற்கு ஸ்டாலின், ரஜினிகாந்த் நடிகர் என்று கூறுகிறார். இவர்கள் என்ன சாக்ரடிஸ் வாரிசுகளா? சாக்ரடீஸ், பிளாட்டோ பரம்பரையிலிருந்து தத்துவ சிந்தனைகளில் இருந்து தமிழகத்துக்கு வந்தார்களா? நடிகர் என்றால் இவர்களுக்கு கேவலமா?

அண்ணாதுரை மேடையில் நடித்தவர்தான். ஸ்டாலினின் தந்தை கருணாநிதியே காகிதப்பூ கதாநாயகன்தான்.  நடிகர் எம்.ஜி.ஆரை காட்டி காட்டி தானே திமுக வெற்றி பெற்றது. ஏன் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஒரு நடிகன் இல்லையா? ரஜினிகாந்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரை நடிகன் என்று கூறும் ஸ்டாலினுக்கு தன் குடும்பத்தில் இருக்கும் நடிகர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? உதயநிதி ஸ்டாலின் அப்படியே தந்தை ஸ்டாலின் பார்வையில் இப்போது அரசியல்வாதி. காரணம் தமிழ் நாட்டில் நீதி கட்சி தொடங்கி இன்று வரை திராவிட வரலாறை விரல் நுனியில் உதயநிதி வைத்திருக்கிறாரா?

தமிழ்நாட்டில் சில வரலாறுகளை தூக்கத்தில் இருக்கும் போது உதயநிதியிடம் கேட்டால் சொல்லக்கூடியவரா? அப்படி பட்டவர்கள் ரஜினியை கலாய்க்கலாமா?  ஸ்டாலின் வாயிலிருந்து வரும் அத்தனை தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதாக இருக்கிறது. வரலாற்று ரீதியான வடிகட்டிய உண்மை தகவல்கள் உண்மைக்குப் புறம்பாக பேசுகிறார். ரஜினி மீது பழிபோட்டு இடித்துக் கூறி பேசினால் எனது பதில் இப்படித்தான் இருக்கும். ரஜினிக்காக இனி நான் தான் ஸ்டாலிடம் கேள்வி கேட்பேன்’’எனத் தெரிவித்துள்ளார்.