பெருத்த எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த டிச.31ம் தேதி தாம் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் கூறினார் ரஜினி காந்த். இவ்வாறு தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினியின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் பல தரப்பில் இருந்தும் கிளம்பியது. 

சினிமா உலகத்தைச் சேர்ந்தவர் என்பதால், திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்கள் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். திரையுலகிலும் பல்வேறு பிரிவுகள் உண்டு. அரசியல் பின்னணி உண்டு. நடிகர்களைக் காட்டிலும் இயக்குனர்கள் பலர் குறிப்பிட்ட சில குழுக்களின் சிந்தனை வட்டத்தில் இருந்து தங்களுக்குள் ஒரு வண்ணத்தைப் பூசிக் கொண்டுதான் வெளியே வருகின்றார்கள். அவர்கள் இயக்கும் படங்களில் அந்தச் சாயம் அழகாகத் தெரியும். தங்கள் சார்பு சிந்தனைகளை திரைக்கதை, வசனங்கள் மூலம் தெரிவித்து விட்டு அதற்கான பயனாக, அரசியல் அரங்கில் ஒரு எதிர்பார்ப்புடன் காய் நகர்த்தத் துவங்கி விடுவார்கள். 

இத்தகைய கருத்து அரசியல் பின்னணி கொண்ட சீமான், அமீர் உள்ளிட்ட சிலர் ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து வரும் வேளையில், அவரின் ஆன்மிக அரசியல் அறிவிப்புக்கு இயக்குனர் விசு தனது ஆதரவைத் தெரிவித்தார். 

அவரது கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் பேரரசு தெரிவித்த கருத்து, பலரின் கவனத்தைப் பெற்றது. அவரது பதில் கருத்து இதுதான்...

நாத்திக வேஷம் போடுபவர்கள் முன் இனி ஆத்திகம் பேசும் ... 
- என்று பேரரசு குறிப்பிட்டிருப்பது, ரஜினி அரசியலில் வெற்றி பெறும் பட்சத்தில், பச்சோந்திகள் அதிகரிப்பர் என்பதையே வெளிக்காட்டுவதாகத் தெரிகிறது.