what bharathiraja said about rajini and kamal political entry

ரஜினியும் கமலும் அரசியல் களத்திற்கு வந்த பின்னர், அவர்களை நிறம் காணுகிறேன் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குநர் பாரதிராஜா, தற்போதைய தமிழக அரசியல் குப்பையாக இருப்பதாக தெரிவித்தார்.

ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்தால் எப்படி செயல்படுவார்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, ரஜினியும் கமலும் அரசியல் களம் காணட்டும்.. பிறகு அவர்களை நான் நிறம் காணுகிறேன் என பதிலளித்தார்.

முதலில் ரஜினியும் கமலும் அரசியல் களத்திற்கு வரட்டும்.. அரசியலில் அவர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து பின்னர் அவர்களைப் பற்றி கருத்து கூறுகிறேன் என்பதை அவர்கள் களம் காணட்டும்; நான் நிறம் காணுகிறேன் என ஒற்றைவரியில் தெரிவித்துள்ளார்.