முதுகெலும்பு இரும்பு மாதிரி இருக்கிறது என்பதை காட்ட வேண்டிய சூழ்நிலை விரைவில் இந்துக்களுக்கு வந்து விடும். அப்படி வரும்போது திமுகவும், திகவும் இல்லாமல் தவிடு பொடியாகி விடும்’’ என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘’பெரியார் ராமர் சிலையை செருப்பால் அடித்ததாக ரஜினி கூறவில்லை. அந்தப்படங்களை பேரணியில் கொண்டுவந்ததாகத்தான் ரஜினி சொன்னார்.  சரி அப்படி கொண்டுவரவில்லை என்றால் கொண்டு வரவில்லை என்று சொல்ல வேண்டியது தானே. அதற்காக எதற்கு ரஜினி படங்களை வைத்து கொடும்பாவி எரிக்கிறார்கள். பார்ப்பன ஆதிக்கம் ஒழிக என்று எதற்கு சொல்கிறார்கள்?

 அப்போது திகவினர் ரஜினியை எதிர்க்கிறார்களா? இல்லை பார்ப்பனியத்தை எதிர்க்கிறார்களா?  சமுதாயம் என்று சொன்னால் எல்லோரும் அங்கீகாரத்தோடு வாழ வேண்டும்.  ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தி அரசியல் பிழைப்பு நடத்தும் திகவின் கொள்கையை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.  எனக்கு அல்லாவை பிடிக்கும், இயேசு பிரானை பிடிக்கும், ராமரை பிடிக்கும். நான் அவர்களை வணங்குகிறேன். அதிலே குறுக்கிடுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. 

ரஜினிகாந்த் ஒரு ஆன்மிகவாதி. கடந்த காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வை சொல்லி இருக்கிறார். ரஜினிகாந்த் ரசிகர்கள் இவ்வளவுக்கு பிறகும் பொறுமையாக இருக்கிறார்கள் என்றால் எனக்கே கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. அவருடைய தலைவரின் கொடும்பாவி எரிக்கும் செய்திகளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ரஜினிகாந்த் என்ன மகாபாதக செயலை செய்து விட்டாரா? பெரியாரைப்பற்றி அவர் பெரிய பிரச்னை எதையும் சொல்லவில்லையே.

 

ரஜினிகாந்த் நியாயவாதி. நல்ல மனிதர், மனதில் பட்டதை பேசுபவர். ஆன்மிகத்தை பொறுத்தவரை ரஜினி சொன்னதில் தப்பில்லை. அவரது ரசிகர்கள்தான் பொறுமையாக உள்ளனர். தமிழச்சியை திருமணம் செய்த மனிதரை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. நடப்பு நிகழ்வு அரசியல் சமுதாய சூழல்களை அப்பட்டமாக உண்மையை கூறி பேச் வருகிறார். அதனால் வரக்கூடிய நல்லது கெட்டதுகளை பற்றி அவர் யோசிப்பது கிடையாது. அவர் பேசுகிறார் என்றால் அவரது கருத்துக்கு பிறகு என்ன பிரச்னை இருக்கிறது என்பதை எதிர்தரப்பினர் சொல்ல வேண்டும். 

இந்துக் கடவுள்களை கொச்சைப்படுத்தி அரசியல் நடத்தும் கட்சிகள்காணாமல் போய்விடும். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள், கண்டிக்கப்படுவார்கள். ரஜினியை என்ன மிரட்டுகிறீர்களா? நீங்கள் மிரட்டுவதற்கெல்லாம் இளிச்சாப்பையன் கிடையாது அவர்.  அதையெல்லாம் பார்த்துக்கொள்ளலாம்.  எல்லாப்பையல்களும் சேர்ந்து என்ன மிரட்டுறீங்க..? மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் ரஜினி. அவருக்காக உயிரை கொடுக்கக்கூடிய தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களது கொடும்பாவியை எரிக்க முடியாதா? இந்துக்களை திக- திமுகவினர் இளிச்சாபையன்களாக நினைக்கிறார்கள்.  

என்னதான் அடிச்சாலும் பொறுத்து போய்டுவார்கள், இந்துக்களுக்கு முதுகெலும்பு இல்லை என நினைக்கிறார்கள். எங்களுக்கு முதுகெலும்பு இரும்பு மாதிரி இருக்கிறது என்பதை காட்ட வேண்டிய சூழ்நிலை விரைவில் இந்துக்களுக்கு வந்து விடும். அப்படி வரும்போது திமுகவும், திகவும் இல்லாமல் தவிடு பொடியாகி விடும்’’ என அவர் ஆவேசமாகி விட்டார்.