முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய்  ஏமாற்றி தலைமறைவாகி உள்ளார். அவர் விரைவில் கைது செய்யப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் ஏமாற்றி தலைமறைவாகி உள்ளார். அவர் விரைவில் கைது செய்யப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த 17ம் தேதி ராஜேந்திர பாலாஜி ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, ராஜேந்திர பாலாஜியை தீவிரமாக தேடி வருகின்றனர். வெவ்வேறு கார்களில் மாறி மாறி சென்று அவர் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருகிறார். கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளனர். 

மேலும், 600க்கும் மேற்பட்ட போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அன்ராய்டு செல்போனை பயன்படுத்தாமல் சாதாரண பட்டன் கைப்பேசியை ராஜேந்திர பாலாஜி பயன்படுத்துவதாகவும் எனவே அவர் இருக்கும் இடத்தை கண்டறிவதில் சற்றே தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி விமானம் மூலமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க அவருக்கு எதிராக கடந்த 23ம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜிக்கு உதவியதாக அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜேந்திர பாலாஜி திருப்பத்தூரில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி விரைவில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் ஏமாற்றி தலைமறைவாகி உள்ளார். அவர் விரைவில் கைது செய்யப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ராஜேந்திர பாலாஜி பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடாக 236 பேரை பணியில் சேர்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது.

கடந்த ஆட்சியில் பால்வளத்துறையில் 650 பேர் முறைகேடாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதனால் அதை ரத்து செய்துவிட்டு அவர்களை டிஎன்பிஎஸ்சி மூலமாகவே தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. பால்வளத் துறையில் யார், யார் முறைகேடாக பணியில் சேர்ந்துள்ளார்கள் என்பதை கண்டறிந்து அவர்கள் களையப்படுவார்கள் எனறு தெரிவித்துள்ளார்.