மதுரை மாவட்டத்தில்  சோழவந்தான் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனை போட்டியிட வைக்க முயற்சி நடக்கிறது.  யாத்திரையை திருச்செந்தூரில் நிறைவு செய்ததும், மறுநாளே அந்த தொகுதியில் கட்சியினர், கூட்டம் நடத்தியிருக்கின்றனர். தாமரையை இந்த தொகுதியில் மலரச் செய்வதாகவும் சபதம் போட்டுள்ளனர்.

முக்கிய ஆன்மிகத்தலங்கள் அதிகம் கொண்ட தொகுதி என்பதால், தீவிர உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்ட பல வேலைகளில் பாஜக தீவிரமாக இறங்கி உள்ளது. ஆனால், காலங்காலமாக பாதுகாத்து வைத்த தொகுதியை, நேற்று வந்தவருக்கு தாரை வார்ப்பதா? என்ற குமுறலில், வரும் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட விரும்பும் அதிமுகவின் தற்போதைய, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மூத்த நிர்வாகிகள் டென்ஷனில் இருக்கிறார்கள். ஏற்கனவே இத்தொகுதியில் ஆளுங்கட்சியின் ஒன்றிய நிர்வாகி இறந்து பல மாதங்களாகியும், உள்கட்சி பூசலால் புதிய நிர்வாகியை தேர்ந்தெடுக்கப்படாத நிலை தொடரும் சூழலில், பாஜகவினரின் தீவிர தேர்தல் வேலை, அதிமுக தரப்பை டென்சனாக்கி இருக்கிறதாம்.

 

இந்தத் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த மாணிக்கம் தற்போது எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். இவர் ஓ.பிஎஸ் ஆதரவாளர். அதற்காக அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினராக்கினார் ஓ.பி.எஸ். ஆகவே அதிமுக இந்தத் தொகுதியை விட்டுக் கொடுக்குமா? என்பது சந்தேகமே..!