Asianet News TamilAsianet News Tamil

பலவீனமடைந்ததா கொரோனா 2வது அலை..?? மத்திய சுகாதாரத்துறை அதிரடி தகவல்.

இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா 2வது அலை பலவீனமடைந்து வருவதாக  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழத்து வரும் நிலையில் இத்தகவல் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

 

Weakened corona 2nd wave .. ?? Central Department of Health Action Information.
Author
Chennai, First Published May 13, 2021, 10:10 AM IST

இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா 2வது அலை பலவீனமடைந்து வருவதாக  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழத்து வரும் நிலையில் இத்தகவல் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. முதல் அலையை சமாளித்து அதிலிருந்து மீண்டு வந்த இந்தியா, இரண்டாவது அலையின் கொடூரத்தில் சிக்கிக்கொண்டது. மே மாதத்தின் துவக்கத்தில் உச்சமடைந்து அம்மாத இறுதியிலேயே அது வீழ்ச்சி அடையும் என இந்திய ஆராய்ச்சியாளர்கள் கூறிவந்தனர். ஆனால் இந்தியாவில் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் நாளொன்றுக்கு பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடக்க நேரிடும் என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எச்சரித்தன. 

Weakened corona 2nd wave .. ?? Central Department of Health Action Information.

இந்நிலையில் நாளொன்றுக்கு குறைந்தது 3.50 முதல் 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்களை கொத்துக்கொத்தாக இந்த வைரஸ் பாதித்து வருகிறது. இந்நிலையில் போதிய மருத்துவ படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக  மக்கள் கூட்டம் கூட்டமாக உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் வீழ்ச்சியை நோக்கி செல்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கடந்த மாதம் வைரஸின் தாக்கம் மிகத் தீவிரமாக இருந்தது, தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது. அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. இதனால் தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நோய் பாதிப்பு 4 லட்சத்துக்கும் மேல் அதிகரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 3.60 லட்சமாக குறைந்தது, அதேபோல் நேற்று 3.29 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா இரண்டாவது அலையும் பலவீனம் அடைந்து வருவதாகவும், அதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்படுவதாகவும் கூறியுள்ளது. 

Weakened corona 2nd wave .. ?? Central Department of Health Action Information.

மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் கர்நாடகம், கேரளா, தமிழகம், மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா  அதிகரிக்கும் போக்கைக் காண முடிகிறது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios