இப்ப கலைஞருக்கு பேனா வைப்பீங்க.. நாளை ஸ்டாலினுக்கு உதய் 'விக்கு ' வைப்பாரா..?? சீமான் மரண கலாய்.
மக்கள் பணத்தை செலவு செய்து முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடலில் பேனா வைக்குத் திட்டத்தை நாம் தமிழர் கட்சி தடுக்கும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
மக்கள் பணத்தை செலவு செய்து முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடலில் பேனா வைக்குத் திட்டத்தை நாம் தமிழர் கட்சி தடுக்கும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். மக்களின் வரிப்பணத்தை இப்படி விரயம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். தன் தந்தைக்காக ஸ்டாலின் பேனா வைக்கிறார், ஒரு வேலையைப் உதயநிதி முதல்வர் ஆகி விட்டால் ஸ்டாலினுக்காக மெரினாவில் 'வீக் ' வைப்பாரா என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி தனது பேச்சாற்றலால், எழுத்தாற்றலால் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழகத்தை ஆறுமுறை ஆண்ட முதலமைச்சர் என்ற பெருமை அவருக்கு உண்டு, இந்நிலையில் அவரின் புகழை போற்றும் வகையில் சென்னை மெரினா கடலில் 134 அடி உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை தமிழக அரசு அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில் உதய சூரியன் போன்ற முகப்பு அமைக்கப்பட்டு, அதன் நடுவே பேனா வடிவ பிரம்மாண்டத் தூண் இடம்பெற உள்ளது. அது கருணாநிதியின் வாழ்க்கை மற்றும் அவரது சிந்தனைகள் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நவீன ஒளிப்படங்களும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மெரினா கடலில் 80 கோடி ரூபாய் செலவில், 134 அடி உயரத்தில் பேனா வடிவிலான நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது.
இதையும் படியுங்கள் : "எல்லாமே ரத்து.. அதிமுகவில் வாங்க சேர்ந்து செயல்படுவோம்"- ஓபிஎஸ் திடீர் பல்டி
கருணாநிதியின் நினைவிடத்திலிருந்து சுமார் 650 மீட்டர் நீலத்திற்கு இரும்பு பாலம் அமைத்து அது மெரினா கடற்கரையில் உள்ள நினைவுச் சின்னத்தில் இணையும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. இந்த பாலம் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் கண்ணாடி பாலமாக அமைய உள்ளது. இந்த பிரம்மாண்டமான பாலத்தின் வழியாக பொதுமக்கள் நடந்து சென்று பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ஓபிஎஸ் நீங்க அதிமுக தொண்டரா? வெட்கமா இல்லை.. ஓபிஎஸ்சை டாராக கிழித்த சி.வி சண்முகம்
இந்த சின்னத்திற்கு கலைஞர் பேனா நினைவுச்சின்னம் என்று பெயரிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில அரசு சத்ரபதி சிவாஜிக்கு அரபிக்கடலில் நினைவுச் சின்னம் கட்டி வருகிறது, அதுபோல தமிழகத்தில் கலைஞர் கருணாநிதிக்கும் நினைவுச்சின்னம் அமைய உள்ளது.
தமிழக அரசின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர், அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன, இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த முயற்சியை மேற்கோள் கட்சி தமிழக முதலமைச்சர் தரம் தாழ்ந்து விமர்சித்துள்ளார் இதுதொடர்பாக அவர் கொடுத்துள்ளார் பேட்டி, சமூக வலைதளத்தில் ஆகிவருகிறது. அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-
மெரினாவில் எந்தச் சின்னமும் நிறுவ முடியாது, அது நடக்கப் போவது இல்லை, அதை நிறுவ நான் விடப் போவதும் இல்லை, இப்போது பேனாவை வைப்பீர்கள், பிறகு கண்ணாடி வைப்பீர்களா? ஒருவேளை உதயநிதி முதலமைச்சர் ஆகி விடுகிறார் என்றால் என் அப்பா ஒரு ' விக் ' வைத்திருந்தார், என சொல்லி கடலுக்குள் விக் வைப்பீர்களா? நீங்கள் சொல்லுங்கள்... இது யாருடைய காசு? இதெல்லாம் தேவையில்லாத சேட்டை .. பேனா வைக்கிறேன், கீழ ஒரு நோட்டு வைக்கிறேன், சமாதியில் வடை காபி வைப்பதையே நான் திட்டிக் கொண்டிருக்கிறேன். இதெல்லாம் கொழுப்புதான், இதையெல்லாம் ஊடகங்கள் தான் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.