கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரனாரின் 149- ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டிராஜன், பெஞ்சமின், பாடநூல் கழக தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், செக்கிழுத்த செம்மலாகவும், நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க பெரும்பங்காற்றியவர் வ.உ.சி. அவரின் பிறந்தநாளை ஒட்டி அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி கலந்தாய்வு நடத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,குரூப்-4ல் மொத்தம் 9500 பணியிடங்கள்  உள்ளது, அவற்றில்  6500 பணியிடங்கள் ஊரடங்கிற்கு முன்பே  நிரப்பபட்டது. 

மீதம் தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய பிரிவில் 3ஆயிரம் பணியிடங்கள் உள்ளது, ஊரடங்கு காரணமாக அவர்களுகான கலந்தாய்வு தள்ளிப்போனது. பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என அவர் தெரிவித்தார். நடிகர் விஜயை எம்.ஜி.ஆர் போன்று சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இடத்தை யாரலும் நிரப்ப முடியாது என்றும், மீசை வைத்த எல்லாரும் கட்டபொம்மனாக ஆகி விட முடியாது, செஞ்சி கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது, ஆகையால் புரட்சி தலைவர் புரட்சி தலைவர் தான் என்றார். 

கூட்டணி குறித்து கட்சி தான் முடிவெடிக்கும், அதே போன்று தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்,
எந்த சூழலையும் சந்திக்க நாங்கள் தாயாராக உள்ளோம். கூட்டணி விவகாரம் குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என எச்.ராஜா, எல்.முருகன் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு நாங்கள் பேசக்கூடாது என  சொல்ல அவர்கள் யார்?  நாங்கள் கூட்டணி தர்மத்தை தொடர்ந்து கடைபிடி க்கிறோம், கூட்டணியில் இருப்பவர்களும் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டியது கடமை.கூட்டணியில் இருப்பவர்கள் ஆரோக்கியமான கருத்தை பகிர வேண்டும், யார் காலையும் மிதிக்க கூடாது, மிதிப்பர்வகளை விடவும் கூடாது என்பதே எங்கள் நோக்கம். 

என்றார். நடிகர் ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக  தகவலகள் பரவி வருகிறாது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், கட்சி ஆரம்பிப்பதும், ஆரம்பிக்காமல் இருப்பதும் அவர் விருப்பம், அவருண்டு, அவர் ரசிகிர்கள், அவரை நம்பி உள்ள தொண்டரகள் உண்டு என்றார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதும், வராதாதும் சட்டத்தின் அடிப்படையில் தான், ஆனால் அதனை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. வெளியே வந்தாலும், வரவிட்டாலும் எங்களின் நிலை ஒன்று தான், அவரோ அவரின் குடும்பத்தை சார்ந்தவர்களோ இல்லாமல் கட்சியையும் ஆட்சியையும் நடத்தவேண்டும் என்பது தான் என கூறினார்.