Asianet News TamilAsianet News Tamil

மு.க. ஸ்டாலின் ஆட்சியில் இதை நிலைநிறுத்துவோம்... மோடி, எடப்பாடி அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை..!

‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ என்ற பெயர் தொடர வேண்டும். தவறினால், மே மாதம் பொறுப்பேற்கிற திமுக ஆட்சி பெரியாரின் பெயரை மீண்டும் நிலைநிறுத்தும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

We will do this under Stalin's rule... Vaiko warns Modi and Edappadi governments..!
Author
Chennai, First Published Apr 13, 2021, 8:48 PM IST

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை அருகே, நெடுஞ்சாலைத் துறையினர், கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று பெயர் பொறித்த பலகையை புதிதாக நாட்டி இருக்கிறார்கள். 1979ஆம் ஆண்டு, பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி, ஓராண்டு தொடர் விழாவாக எம்ஜிஆர். தலைமையில் அ.தி.மு.க. அரசு கொண்டாடியது. அப்போது, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ என்று மாற்ற, மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, முதல்வர் எம்.ஜி.ஆர், அவ்வாறு பெயர் மாற்றம் செய்து அரசு ஆணை பிறப்பித்தார்.We will do this under Stalin's rule... Vaiko warns Modi and Edappadi governments..!
ஆனால், எம்ஜிஆர் பெயரைச் சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்துகிற எடப்பாடி பழனிசாமி அரசு, நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில், தந்தை பெரியார் பெயரை நீக்கிவிட்டு ‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’ என்று பெயர் மாற்றம் செய்து இருக்கிறது. ஆர்எஸ்எஸ் சங் பரிவார் வகுத்த வியூகத்தின்படி, டெல்லி எஜமான் மோடி பிறப்பித்த ஆணையை, அடிமை எடப்பாடி நிறைவேற்றி இருக்கிறார். தமிழ்நாட்டின் தன்மானத்தை அடகு வைத்துவிட்டார். ஏற்கனவே, சென்னை விமான நிலையத்திலிருந்து, காமராஜர் அண்ணா பெயரை நீக்கியதையும் அடிமை எடப்பாடி அரசு கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவாக, இப்போது இந்த மாற்றம் நடந்திருக்கிறது.We will do this under Stalin's rule... Vaiko warns Modi and Edappadi governments..!
தமிழக முதல்வர் மட்டுமின்றி நெடுஞ்சாலைத் துறைக்கும் பொறுப்பு வகிக்கிற எடப்பாடிக்கு, சூடு சொரணை இருந்தால், தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள, இந்தப் பெயர் மாற்றத்தை உடனே நீக்க வேண்டும். ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ என்ற பெயர் தொடர வேண்டும். தவறினால், மே மாதம் பொறுப்பேற்கிற திமுக ஆட்சி பெரியாரின் பெயரை மீண்டும் நிலைநிறுத்தும்.” என்று வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios