Asianet News TamilAsianet News Tamil

குகையில் இருந்து சிங்கம் வெளியேறிவிட்டது.. இனி தான் வேட்டை ஆரம்பம்.. அதிமுகவை அலறவிடும் விஜயபிரபாகரன்..!

சாணக்கியனாக இருந்தது போதும் இனி தேமுதிக சத்ரியனாக இருக்க நேரம் வந்துவிட்டது என தொண்டர் மத்தியில் விஜய பிரபாகரன் ஆவேசமாக பேசியுள்ளார். 

We will defeat Palanisamy in Edappadi constituency... vijay prabhakaran
Author
Cuddalore, First Published Mar 9, 2021, 2:32 PM IST

சாணக்கியனாக இருந்தது போதும் இனி தேமுதிக சத்ரியனாக இருக்க நேரம் வந்துவிட்டது என தொண்டர் மத்தியில் விஜய பிரபாகரன் ஆவேசமாக பேசியுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக 3 கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

We will defeat Palanisamy in Edappadi constituency... vijay prabhakaran

இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக கூட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசுகையில்;- அதிமுகவுக்குதான் இனி இறங்கு முகம். அதிமுகவின் தலைமைதான் சரியில்லை. யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல தேமுதிகவினர். தலையே போனாலும் தன்மானத்தை இழக்க மாட்டோம். தேமுதிகவிடம் 10,12 என தொகுதிகளுக்கு பேரம் பேசுகிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் கேப்டனுக்கு அதிமுக துரோகம் செய்தது. 

We will defeat Palanisamy in Edappadi constituency... vijay prabhakaran

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம். சாதியை பற்றி எனக்கு தெரியாது.  அப்படி பேசினால் நான் முட்டாளாகவே இருப்பேன். நமக்கு தெரிந்த ஒரே சாதி தேமுதிக தான். சாணக்கியனாக இருந்தது போதும் இனி தேமுதிக சத்ரியனாக இருக்க நேரம் வந்துவிட்டது. தமிழகத்தில் இரண்டு ஆளுமைகள் இருந்தபோதே தனித்து களம் கண்டிருக்கிறோம். நாங்க கேட்கிற சீட் கொடுக்க முடியவில்லை என்றால், ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுகவின் சீட்டை தேமுதிகவினர் பறிப்பர்.  

எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி தோல்வியடைவார். இதுவரை விஜயகாந்த், பிரேமலதாவை பார்த்திருப்பீர்கள். இனி இருவரையும் கலந்து என்னை பார்ப்பீர்கள். மக்களை சோம்பேறியாக்க இலவசங்களை தருகிறார்கள் என விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios