முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றுள்ள நிலையில் தங்களது கோரிக்கை குறித்து ஆளுநர் அழைத்துப் பேசாவிட்டால் நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம் என டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.

புதுவை 100 அடி ரோட்டில் உள்ள சொகுசு  தங்கியுள்ள தங்க தமிழ்ச்செல்வன்  செய்திளார்களிடம் பேசினார். அப்போது

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட மிகப்பெரிய கட்சி அ.தி.மு..க.  பிளவு பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் தாங்கள் ஒருங்கிணைந்து இங்கு தங்கியுள்ளதாக தெரிவித்தார்.

தங்களது தொகுதி மக்களை, மனைவி, மக்களை, சொந்த பந்தங்களை விட்டுவிட்டு சோதனை காலத்தில் இங்கு கூடியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுகவை  வழிநடத்த, வலிமைப்படுத்த சசிகலா மற்றும்  தினகரனால் மட்டும்தான் முடியும் என்றும் தங்க தமிழ் செல்வன் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம். இன்னும் 2 நாளில் கட்டாயமாக  அவர் எங்களை அழைப்பார் என நம்புகிறோம். அப்படி கவர்னர் எங்களை அழைக்காவிட்டால் கவர்னரை நியமித்த ஜனாதிபதியை சந்திக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் . அவரிடம் எங்கள் கோரிக்கையை முன்வைப்போம் என்றும் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.