We have ignored the JDB inquiry filed by the party and the symbol that we own.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் இபிஎஸ், ஒபிஎஸ் தரப்புக்கும் டிடிவி தினகரன் தரப்புக்கு அனல் பறக்கும் வாதம் நடைபெற்று வருகிறது. ஆனால் கட்சியும் சின்னமும் எங்களுக்குதான் என சொந்தம் கொண்டாடி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்த ஜெ.தீபா விசாரணையை புறக்கணித்துள்ளார்.

அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து பன்னீர்செல்வமும் சசிகலா தரப்பும் தங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியது. 

இதனால் குழப்பமடைந்த தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இதையடுத்து இரு தரப்பும் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வந்தது.

இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பும் ஒபிஎஸ் தரப்பும் ஒன்றாக இணைந்தாலும் டிடிவி தரப்பு தனியாக செயல்பட்டு வருகிறது. மேலும் கட்சி எங்களுக்கே சொந்தம் என கூறி வருகிறது. 

மேலும் இருதரப்பும் தங்களுக்கே கட்சியும் சின்னமும் தரவேண்டும் என கோரி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து வந்தனர். 

இதனிடையே ஜெவின் அண்ணன் மகளான ஜெ.தீபா தனக்கே கட்சியும் சின்னமும் சொந்தம் என கூறி பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார். 

ஆனால் இவர்களின் ஆவணங்களை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துகொள்ள வில்லை போலும். 

அக்டோபர் 31 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 10 ஆம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எனவே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 

இதில், ஒபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்களும் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர்களும் வாதடி வருகின்றனர். 

இந்த விசாரணையில் ஜெ தீபா தரப்பு பங்கேற்கவில்லை. தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.