We have doubts that Jayalalithaa might have been attacked
ஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது எனவும் ஜெயலலிதாவுடன் போயஸ் இல்லத்தில் இருந்த அனைத்து நபர்களையும் விசாரிக்க வேண்டும் எனவும் ஜெ.தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் டிசம்பர் 5 ஆம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக அறிவிப்பு வெளியானது. இதில் மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும் சசிகலாவை தவிர வேறு யாரும் ஜெவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து முதலமைச்சரான ஒபிஎஸ் சசிகலாவின் வற்புறுத்தலின் காரணமாக பதவியை ராஜினாமா செய்து விட்டு கோபமாக போய் ஜெ சமாதியில் அமர்ந்தார். பின்னர் சசிகலாவுக்கு எதிராக போர்கொடி தூக்கி முதலமைச்சர் பதவியை மீண்டும் பிடிக்க முற்பட்டார்.
ஆனால் எடுபடவில்லை. எடப்பாடி முதல்வராகிவிட்டார். அதைதொடர்ந்து சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் ஜெ மரணத்தில் சந்தேகம் உள்ளது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எனவும் குரல் எழுப்பினார்.
அதன்படி இரண்டும் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகின்றது. இதனிடையே சசிகலாவால் துரத்தியடிக்கப்பட்ட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புதிதாக ஒரு பேரவையை தொடங்கி தாம் தான் ஜெவின் உண்மையான வாரிசு என காணல் நீர் போல அறைக்கூவல் விடுத்து வருகிறார்.
இந்நிலையில், ஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது எனவும் ஜெயலலிதாவுடன் போயஸ் இல்லத்தில் இருந்த அனைத்து நபர்களையும் விசாரிக்க வேண்டும் எனவும் ஜெ.தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஜெயலலிதா வீட்டில் இருந்த ஒரு நபர் பல்வேறு தகவல்களை எங்களுக்கு தந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
