We had dangers - Deepa
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் - அம்மா - தீபா பேரவை பொது செயலாளர் தீபாவும், எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் மாதவனும் கடந்த சில தினங்களுக்குமுன்பு தனித்தனியாக இயங்கி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 12.20 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்துக்கு தீபாவும் மாதவனும் இணைந்து சென்று அஞ்சலி செலுத்தினர்.
கடந்த சில நாட்களாக பிரிந்திருந்த அவர்கள் இருவரும் இணைந்து வந்தது அனைவரையும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
இந்த நிலையில், வார இதழ் ஒன்றிற்கு தீபா பேட்டி அளித்துள்ளார். அப்போது, திடீர் பிரிவு... திடீர் இணைப்பு என்று ஷாக் கொடுத்து கொண்டு இருக்கிறீர்களே? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தீபா, நாங்க எப்போ பிரிஞ்சோம்? ஒன்றாக இணைந்து செயல்படுவதால் எங்கள் இருவருக்குமே பயங்கர ஆபத்துகள் இருந்தன. வேறு சில சக்திகளும் எங்களைப் பிரித்து வைக்க ஆசைப்பட்டன.
எங்களை எவ்வளவு பெரிய சதியையும் அவர்கள் செய்ய துணிவார்கள் என்பது தெரியும். அதனால், எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகளும் வந்துவிடக் கூடாது என்பதற்காக சிறிது காலம் தனித்தனியாக செயலாற்ற நினைத்தோம் என்று தீபா கூறியுள்ளார்.
