நாளை நடைபெறும் வாக்கெடுப்பின்போது ஓ.பி.எஸ்சும் வேண்டாம் எடப்பாடியும் வேண்டாம். இது அம்மா கொடுத்த வாழ்வு. நாங்கள் நடுநிலையாகவே இருக்கிறோம் என்று சில எம்.எல்.ஏக்கள் முடிவெடுக்க உள்ளார்களாம்.

சட்டசபையில் நாளை நடக்கும் வாக்கெடுப்பின்போது 117 எம்.எல்.ஏக்களை கட்டாயம் தனக்கு ஆதரவாக வாக்களிக்க செய்தால் மட்டுமே எடப்பாடிக்கு முதலமைச்சர் பதவி தப்பும்.

இந்நிலையில் 124 எம்.எல்.ஏக்கள் மட்டுமே எடப்பாடி பக்கம் இருப்பதாக கூறினாலும் அவர்கள் சுதந்திரமாக வெளியே விடப்படாமல் கடந்த 12 நாட்களாக கூவத்தூரில் தங்கவைக்க பட்டுள்ளனர்.

இதை அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று ஓ.பி.எஸ் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கு ஆதாரமாக முதல்வர் பதவி ஏற்ற அன்று அமைச்சர்களுடன் சேர்ந்து 104 எம்.எல் ஏக்கள் மட்டுமே வந்தனர் என்றும் மீதி உள்ளவர்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இதுகுறித்து அதிமுக தரப்பில், விசாரித்த போது சில எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு ஓ.பி.எஸ்சும் வேண்டாம் எடப்பாடியும் வேண்டாம். நாங்கள் விரும்பியது இது அல்ல. அம்மா எங்களை வாழ வைத்தார். கட்சிக்காக தமிழ்நாடு முழுவதும் உடல்நிலையை பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து எங்களை வெற்றி பெற செய்தார்.

அம்மாவின் மறைவிற்கு பிறகு அம்மாவின் மனதுக்கு எதிரான நிகழ்சிகள் நடக்கிறது. இது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. நாங்கள் எந்த கோஷ்டியிலும் சேர விருமபவில்லை .

நாங்கள் நடுநிலையுடன் இருக்கிறோம் என்று கூற உள்ளதாக தெரிவிக்கின்றனர். 20 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் இதுபோன்ற நிலை எடுக்கலாம்.