வாக்குரிமை இல்லாத இரட்டை குடியுரிமை பெறுவதற்கு அரசியல் சாசனத்தில் இடம் உள்ளது என்று தமிழ் வளர்ச்சிதுறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார், திருத்தப்பட்ட இந்திய குடியுரிமைச் சட்டத்தில்  ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படமாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த சட்டம் இஸ்லாமியர்களையும் ஈழத்த தமிழ்ர்களையும் பறக்கணிக்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது,  ஆண்டாண்டு காலமாக தமிகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு  குடியுரிமை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.   இந்நிலையில்  சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில்,  உலகளவிலான இரண்டு நாள் சிற்றிலக்கிய மாநாடு நடைபெற்றது.  இதில் தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.பாண்டியராஜன். 

இதையும் கொஞ்சம் படியுங்க:-  ஜெகனும் , கெஜ்ரிவாலும் கேப்டனை காப்பி அடிச்சிட்டாங்க...!! மேடையில் வாய்கூசாமல் பேசிய பிரேமலதா..!!

தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்காக, அனைத்து கல்லூரிகளிலும் தமிழில் அதிக ஆர்வமுள்ள மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கென தனியாக பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, அவர்களுக்கு இளம் தமிழர் இலக்கியர் விருதுகள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படவுள்ளது என்றார்.  வாக்குரிமை இல்லாத இரட்டை குடியுரிமை பெறுவதற்கு அரசியல் சாசனத்தில் இடம் உள்ளது.  எனவே முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்த முறையில் குடியுரிமை வழங்க நாங்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.