2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தேமுதிக ஆட்சியை அமைக்கும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் தேமுதிகவின் 20 ஆம் ஆண்டு கொடி நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கட்சி கொடியை ஏற்றினார். சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் 118 அடியில் இந்த கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உள்ள 150 அடி உயர கொடி கம்பத்திற்கு அடுத்ததாக மிக உயரமான கொடி கம்பமாக இது அமைந்துள்ளது.  

தேமுதிக கொடி நாள் நிகழ்ச்சியில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர்கள் எல்.கே.சுதிஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  கொடியேற்றியப் பின்னர் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பிரேமலதா விஜயகாந்த் இது போன்ற ஒரு கொடி கம்பத்தை அமைக்க வேண்டும் என்றால் மற்ற கட்சிகள் கடை கடையாக சென்று வசூல் செய்து தான் இதனை செய்து இருப்பார்கள் ஆனால் தேமுதிக அதனை செய்யாது. விஜயகாந்த் அறிமுகம் செய்த திட்டங்களை தான் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் செயல்படுத்தி வருகிறார். லஞ்சம், ஊழலை ஒழிப்போம் என விஜயகாந்த் கூறியதை தான் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி ஆட்சியை பிடித்து உள்ளார். ஒரே ஒரு வாய்ப்பை தந்திருந்தால் இது போன்ற ஒரு லட்சம் வாக்குறுதிகளை விஜயகாந்த் நிறைவேற்றி இருப்பார்.  ஆனால் மக்கள் தவறிவிட்டனர்.  மக்கள் புரிந்து கொண்டு மாற்றத்தை தரவேண்டும்  தேமுதிகவின் கொள்கை என்ன என கேட்பவர்களுக்கு தேமுதிகவின் கொள்கை கட்சியின் கொடியிலேயே உள்ளது. குட்ட குட்ட குனிய மாட்டோம் என பேசியதற்கு பிரேமலதா விளக்கம் 

கூறிய பிரேமலதா , கூட்டணி தர்மத்தை என்றைக்கும் மதிக்கும் கட்சி தேமுதிக தான். அது போன்று கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் அதனை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு எதிர் அணி வெற்றி பெற்றுவிடும் என்பது தான் நான் கூறியதற்கான அர்த்தம்.  இதனால் கூட்டணியில் பிளவு என அர்த்தம் இல்லை. ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ளது. அடுத்தபடியாக நகர்ப்புற தேர்தல் நடைபெற உள்ளது, அதில் தேமுதிக தொண்டர்கள் பம்பரமாய் சுழன்று வெற்றிக்கு பாடுபடவேண்டும்.காவிரி, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வருக்கு நன்றியும், பாராட்டுக்களையும் தேமுதிக தெரிவித்துக் கொள்கிறது.

 

தேமுதிகவை சுற்றி சூழ்ச்சிகளும் துரோகங்களும் நடக்கின்றன. இதனை வென்றெடுக்க விஜயகாந்த் மீண்டும் வந்துவிட்டார். 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தேமுதிக ஆட்சியை பிடிக்கும். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்: கொடி நாள் வாழ்த்து தெரிவித்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்,  பேச முடியாத காரணத்தால் உரையை முடித்துக் கொண்டார்.  முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டதை சேர்ந்த சிறுமி அனுஷ்கா மேடையில் விஜயகாந்த் குறித்து பேசினார். இவரின் பேச்சை ரசித்த விஜயகாந்த் அந்த சிறுமிக்கு கை கொடுத்து மடியில் அமர வைத்து அழகு பார்த்தார்.