we can expect the new info on 7 november
நடிகர் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை வெற்றி கரமாக முடித்து விட்டார். அடுத்த கட்ட நகர்வாக அதிக கவனம் செலுத்துவதில் மிகவும் பிசியாக உள்ளார் கமல்...
நடிகர் கமல் பற்றி புதியதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை அதாவது. அரசியலில் குதிப்பது என்பது முடிவு செய்து விட்ட பிறகு ஒரே பரபரப்பான பேச்சு தான்... அதுவும் தமிழக அரசியல் நிலைமையை கிழி கிழி என கிழித்து வருகிறார்
இவர் போகிற வேகம் பார்த்தால்,எகிறி பிடிக்கிற மாதிரி தான் தோன்றுகிறது ....அதுமட்டும் இல்லாமல், சில நாட்களாகவே கமலுக்கு எதிராகவும் சில கருத்துக்கள் வெளிவந்துகொண்டே இருக்கிறது
அதாவது, ட்விட்டர்ல தான் அரசியல் செய்து வருகிறார் கமல் என பலரும் கிண்டல் செய்தும்,அவரை கடுமையாக விமர்சனம் செய்தும் வருகின்றனர்
இந்நிலையில் நவம்பர் 7 ஆம் தேதி, கமலுக்கு பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நாளில் தான் நடிகர் கமல் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை இன்று காலை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது கமல் தெரிவித்ததாக, கமல் ரசிகர் மன்ற பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், டெங்குவுக்கு எதிராக களப்பணியாற்றவும், கல்வி சார்ந்த நற்பணிகளில் அதிக கவனம் செலுத்தவும் கமல் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்லூரி மாணவர்களை வற்புறுத்தி, சேவையில் ஈடுபட வைக்க வேண்டாம் எனவும், டெங்குவிற்காக வீடு வீடாக சென்று, நிலவேம்பு கசாயத்தை கொடுங்கள்.ஆனால் அதனை விளம்பரம் செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார் கமல்
இதன் மூலம், கமலின் அரசியல் பிரவேசம் டெங்குவில் தொடங்கி, கல்வியில் டச் செய்து....பின்னர் முழு அரசியலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
