we are ready to face the enquiry about saravanan viedio

சரவணன் வீடியோ விவகாரம், ஆர்.கே.நகர் தொகுதி பணப்பட்டுவாடா போன்ற விவகாரங்கள் தொடர்பான விசாரணைக்கு தயாராக இருப்பதாக அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி,தினகரன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களுக்கு பணம் மற்றும் தங்கம் கொடுத்தது தொடர்பாக எம்எல்ஏ சரவணன் பேசிய வீடியோ ஒன்றை ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்டது.

இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட் வேண்டும் என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவை சந்தித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார்.

இதையடுத்து இது குறித்த விசாரணை நடத்த சபாநாயகர் தனபால் மற்றும் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் சென்னை அடையாறு இ.லலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை பொதுச் செயலாளர் சசிகலாதான் முடிவு செய்வார் என தெரிவித்தார்.

எனது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கவில்லை. நாள் கட்சியில் இணைந்து துணைப் பொதுச் செயலாளராக செயல்பட வேண்டம் என்று நினைக்கின்றனர். தமிழகம் முழுவதும் என்னை அழைத்துச் செல்ல வேண்டும் என விரும்புகின்றனர் என தினகரன் தெரிவித்தார்.

அதிமுக இரு அணிகள் இணைய சசிகலா 60 நாட்கள் அவகாசம் கொடுத்திருக்கிறார். அதனால் நான் விலகி இருக்கிறோன். அவர்கள் இணையவில்லை என்றால் நான் துணைப் பொதுச் செயலாளராக இணைந்து செயல்படுவேன் என தெரிவித்தார்.

அதிமுகவில் உள்ள 122 எம்எல்ஏக்களும் என் நண்பர்கள்தான்…என் ஆதரவாளர்கள் தான் என தினகரன் தெரிவித்தார்.

என்னை கட்சியில் இருந்து நீக்க பொதுச் செயலாளரைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என அவர் கூறினார்

பொதுச் செயலாளரைவிட அதிக அதிகாரம் படைத்த நிதி அமைச்சர் ஜெயகுமார் தலைமையிலான குழு ஓபிஎஸ் இணைய வேண்டும் என வானத்தை நோக்கி காத்திருக்கிறார்கள் என தினகரன் குறிப்பிட்டார்.

சரவணன் வீடியோ விவகாரம், ஆர்.கே.நகர் தொகுதி பணப்பட்டுவாடா போன்ற விவகாரங்கள் தொடர்பான விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும், மடியில் கனமில்லை எனவே பயமில்லை எனவும் டி.டி.வி,தினகரன் தெரிவித்துள்ளார்.

எனது குடும்பத்தைச் சேர்ந்த திவாகரன் மகன் ஜெயானந்த் அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரியவில்லை எனவும் அவர்கள் அரசியலுக்கு வர விரும்பினால் அது அவர்கள் விருப்பம் என்றும் தெரிவித்த டி.டி.வி.தினகரன் அதை பொதுச் செயலாளர்தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.