என்னுடைய தாத்தா வயதில் இருப்பவரை எப்படி நான் அடிக்க முடியும்? தாத்தா வயதில் இருக்கக்கூடியவரை அடிக்கக்கூடிய அளவிற்கு மனநோயாளி நான் அல்ல. 

தருமபுரி மாவட்டம், அரூர் தொகுதி, மொரப்பூரில் நேற்று முன் தினம் இஸ்லாமிய கைதிகள் மற்றும் ராஜிவ் காந்தி கொலையில் குற்றவாளிகளான 7 பேரை விடுவிக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பேசிய, நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர், தமிழக முதலமைச்சர் மற்றும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

அப்போது, திமுகவின் மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் உள்ளிட்டோர் மேடையேறி நாம் தமிழர் கட்சியினருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினர். மேடையில் இருந்த மைக் சேதப்படுத்தப்பட்டது. நாம் தமிழர் நிர்வாகி மீது நாற்காலியும் வீசப்பட்டது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’நாங்கள் ஒரு கூட்டம் நடத்துகிறோம். விருப்பம் இருந்தால் கேளுங்கள். இல்லை என்றால் விலகி செல்லுங்கள். மேடையில் ஏறி தகராறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தான் திமுக. திமுக இப்படி தான் செய்யும். சின்ன சின்ன பசங்க இருந்ததால் நீங்கள் தகராறு செய்துவிட்டீர்கள். ஒருவேள மேடையில் நான் இருந்து பேசிக்கொண்டு இருந்தால் என்ன நடந்திருக்கும்? செருப்பை காட்டியதோடு இல்லாமல் அடித்து வெளுத்திருப்பேன்.

நான் பொறுமையாக இருக்கிறேன். அதற்கும் ஒரு எல்லை உண்டு. என்னை தொடாமல் என்னை சுற்றி இருப்பவர்களை தொட்டு என்னை காயப் படுத்துகின்றனர். 

முதல்வர் பல நல்ல விஷயங்களை தனது தொகுதியில் செய்து இருக்கிறார். திமுகவை விமர்சனம் செய்யவில்லை. ஆனால் அங்கு ஜனநாயகம் இல்லை. இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என தருமபுரியில் கூட்டம் நடத்தினர். அதனை கண்டுகொள்ளவில்லை. ஆனால் இஸ்லாமிய வாக்குகள் மட்டும் தேவை என்கின்றனர்.

இதையும் படியுங்கள்:- நீங்க தடுப்பூசி போடலைனா நாங்க சம்பளம் போடமாட்டோம்... அரசு ஊழியர்களுக்கு ஆப்பு..!

கருத்து உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. கடந்த காலத்தில் நானும் பழிவாங்கப்பட்டேன். ஈழ தமிழர்களை பேசியதால் ஒராண்டு சிறையில் இருந்தேன். என் உரிமை நான் கூட்டத்தில் பேசும்போது செருப்பு காட்டி பேசினேன். அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பேசுகின்றனர். என்னை தொடமுடியவில்லை. அதனால் கூட இருப்பவர்களை கைது செய்து சிரமத்தை உருவாக்குகின்றனர்

எனத் தெரிவித்து இருந்தார்.

Scroll to load tweet…

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான ஹிம்லர், ‘’உங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஏன் தாக்குதல் நடத்தவில்லை என பலரும் கேட்கின்றனர். அவர் என் தாத்தா வயதில் இருக்கிறார். என்னுடைய தாத்தா வயதில் இருப்பவரை எப்படி நான் அடிக்க முடியும்? தாத்தா வயதில் இருக்கக்கூடியவரை அடிக்கக்கூடிய அளவிற்கு மனநோயாளி நான் அல்ல. 

அந்த அளவிற்கு தரம் கெட்டவன் நான் அல்ல. அவர் வேண்டுமானால் பேரன் வயதில் இருக்கும் எங்களை அடிக்க நிதானமில்லாமல், தெளிவில்லாமல் இருந்திருக்கலாம். எனவே அதே தவறை நாமும் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. அந்தத் தவறை நாமும் செய்திருந்தால் நமக்கும் அவருக்கும் வேறுபாடு இல்லாமல் போயிருக்கும். நமக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது’’ என அவர் தெரிவித்துள்ளார்.