நாங்கள் புலி வேட்டைக்கு சென்று கொண்டிருக்கிறோம் எங்களால் எலிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என திமுக அமைப்பு செயலாளர் அதிமுகவிற்கு பதிலடி கொடுத்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்தது தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்து பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது: 

எங்கள் தலைவர்  பொறுத்த மட்டிலும் இமயமலைக்கு சமமாக அரசியலில் இருந்து கொண்டிருக்கிறார்,  இமயமாக இருக்கின்ற எங்கள் தலைவர் தளபதியை பார்த்து ஒரு நாய் குறைத்ததாக தான் நாங்கள் கருதுகிறோம்,  இப்படிப்பட்ட தெருவோர நாய்களுக்கெல்லாம் எங்களுக்கு பதில் சொல்லி பழக்கம் இல்லை. ஒரு நல்ல அரசியல்வாதியை பற்றி கேட்டால் நான் பதில் சொல்வேன். கொள்கை எங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்பதை 70 ஆண்டு கால பாரம்பரியம் மிக்கது எங்கள் கட்சி என்பதில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள். 

எங்கள் தலைவர் 50 ஆண்டுகால வரலாறு மிக்க அரசியல் தலைவராக இருக்கிறார், அவரைப் பற்றி விமர்சிக்கும் தெருவோர நாய்கள் எல்லாம் எங்களால் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது, பொறுப்பு  உள்ளவர்களுக்கு மட்டும்தான் எங்களால் பொறுப்பான பதில் சொல்ல முடியும்,  நாங்கள் புலி வேட்டைக்கு சென்று கொண்டிருக்கிறோம் எங்களால் எலிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும் கூறினார்.