தூய்மை பணியாளர்கள் போராட்டம், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம், நெடுஞ்சாலை பணியாளர்கள் போராட்டம் என திமுக அரசை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் திமுக மடைமாற்ற கிளம்பிவிட்டது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், "தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்கிற ஆளுநரிடமிருந்து பட்டம் பெற முடியாது" என்று தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்த பிஹெச்டி மாணவி ஷீன் ஜோசப், ஆளுநர் ஆர்.என்.ரவியை புறக்கணித்து, அருகிலிருந்த துணைவேந்தரிடம் இருந்து பட்டத்தை பெற்றுக் கொண்டார். எனினும் ஆளுநர் அதனை பொருட்படுத்தாமல் அந்த மாணவிக்கு வாழ்த்து கூறினார். ஷீன் ஜோசப் மேடையில் இப்படி நடந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஷீன் ஜோசப் ராஜனின் கணவர் நாகர்கோவில் மாநகர திமுக துணை செயலாளராக இருக்கிறார். ‘‘நான் திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவள்’’ எனக்கூறும் ஷீன் ஜோசப் கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். மேடையில் ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த செயல் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. திமுக நாகர்கோவில் மாநகராட்சி துணைச் செயலாளர் எம்.ராஜனின் மனைவி ஷீன் ஜோசப் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை புறக்கணிக்க தானும், தனது மனைவியும் ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததாகக் கூறியுள்ளார்.
திமுகவினர் ஷீன் ஜோசப்பின் இந்தச் செயலைக் கொண்டாடி, வாழ்த்தினாலும் பலரும் அந்த மாணவிக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்து வருகிறனர். ‘‘ஆளுநர் என்னும் பதவிக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். அரசியல் மற்றும் வெறுப்புகளை தாண்டி தக்க மரியாதை கொடுக்க வேண்டும். இது விளம்பரம்தான் இன்றி வேறு என்ன? ஆளுநரின் கைகளால் பட்டம் பெற்ற மாணவர்கள் சுயமரியாதை அற்றவர்கள், தமிழ் மீதும் தமிழ்நாடு மீதும் பற்று இல்லாதவர்களா ? மரபு, மரியாதை, பண்பாட்டை உணர்ந்து செயல்பட விடாமல் விளம்பர மோகத்தால் செய்த செயல், கற்ற கல்வி, அறிவு பட்டத்திற்கு கிடைத்த இழுக்கு. முதலில் 'ஜீன் ஜோசப்' என்பது தமிழ் பெயரா என்பதை அந்தப்பெண் விளக்க வேண்டும்’’ என கடுமையாக கண்டித்துள்ளனர்.
‘‘சபை நாகரீகம் கருதி இதை தவிர்த்திருக்கலாம். அரசியல், சித்தாந்த ரீதியாக நேரடி மோதலில் இருக்கிற முதல்வரே அரசு நிகழ்ச்சிகளில் ஆளுநரிடம் மரியாதையாக நடந்து கொள்கிறபோது, இது மாதிரியான நிகழ்வுகள் அவசியமில்லாதது. எந்த பயனும் இல்லை. படித்து பட்டம் வாங்கும் முன்பே அரசியலா? முதிர்ந்த அரசியல்வாதி போல் அதற்கு காரணம் சொல்கிறார். தமிழில் ஒரு சொல் உண்டு. குளத்துடன் கோபித்துக் கொண்டு சுத்தம் செய்யாமல் போனால், நஷ்டம் குளத்திற்கு அல்ல’’
கல்லூரி நிர்வாகம் முடிவு எடுத்து ஆளுநரை வரவழைத்ததை ஷீன் ஜோசப் தவறு என்று சொல்ல வருகிறாரா? அப்படியானால் கல்லூரி நிர்வாகம் தவறு என்றால் அங்கே படிக்கிற, பாடம் எடுக்கிற அத்தனை பேரையும் அந்த மாணவி உதாசினபடுத்திவிட்டார். படித்தால் மட்டும் போதாது. அறிவும் வேண்டும், வெறும் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது’’ என எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
‘‘தூய்மை பணியாளர்கள் போராட்டம், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம், நெடுஞ்சாலை பணியாளர்கள் போராட்டம் என திமுக அரசை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் திமுக மடைமாற்ற கிளம்பிவிட்டது. இதோ தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடமிருந்து பட்டம் பெற ஜீன் ஜோசப் என்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பிஎச்டி மாணவி மறுத்துள்ளார். அடுத்து அறிவாலய நிலைய வித்துவான்கள் இதனை பேசுபொருளாக மாற்றுவார்கள். நாடக கும்பலின் நாடக காட்சியில் இதுவும் ஒன்று’’ என எதிர்கட்சியினர் கூறி வருகின்றனர்.
