Asianet News TamilAsianet News Tamil

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை..!! அடுத்த 24 மணி நேரத்தில் நிகழப்போவது இதுதான்..!!

அதே செப்டம்பர் 23ஆம் தேதி மத்திய கிழக்கு வட கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் மகாராஷ்டிரா, குஜராத், கடலோர பகுதிகளில், சூறாவளி காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

Warning to the people of Tamil Nadu, This is what is going to happen in the next 24 hours
Author
Chennai, First Published Sep 23, 2020, 12:54 PM IST

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Warning to the people of Tamil Nadu, This is what is going to happen in the next 24 hours

கடந்த 24 மணி நேரத்தில், சிவலோகம் (கன்னியாகுமரி) 6 சென்டி மீட்டர் மழையும்,  சித்தார் (கன்னியாகுமரி) 4 சென்டிமீட்டர் மழையும், பெருஞ்சாணி (கன்னியாகுமரி) புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 3 சென்டிமீட்டர் மழையும், பெரியாறு (தேனி) பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) நாகர்கோயில் (கன்னியாகுமரி) வால்பாறை (கோவை) குழித்துறை (கன்னியாகுமரி) கூடலூர், தேனி, சின்னக்கல்லார் (கோவை) சுரலாக்கோடு (கன்னியாகுமரி) தலா 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. செப்டம்பர் 23-ஆம் தேதி கேரளா, கர்நாடக, கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்றில் 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், 

Warning to the people of Tamil Nadu, This is what is going to happen in the next 24 hours

அதே செப்டம்பர் 23ஆம் தேதி மத்திய கிழக்கு வட கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் மகாராஷ்டிரா, குஜராத், கடலோர பகுதிகளில், சூறாவளி காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 23-24 ஆகிய தேதிகளில் தென்மேற்கு அரபிக்கடலில் மேற்கு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குலச்சல் முதல் தனுஷ்கோடி வரை 24- 9-2020 இரவு 11:30 மணி வரை கடல் உயரலை 3.5 மீட்டர் முதல் 3.7 மீட்டர் வரை எழும்பக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios