Asianet News TamilAsianet News Tamil

விமான பயணிகளுக்கு எச்சரிக்கை.. இரவு நேர விமானங்கள் முழுமையாக ரத்து.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

அதன்படி சென்னையிலிருந்து மதுரை,கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய தமிழ்நாட்டிற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்கும் பயணிகள் அனைவரும் இன்று  காலை முதல் இ-பதிவுடன் பயணம் மேற்கொள்கின்றனா். 

Warning to air passengers .. Night time flights completely canceled .. Shock over shock.
Author
Chennai, First Published May 17, 2021, 12:10 PM IST

சென்னை உள்நாட்டு  விமானநிலையத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம்  பயணிக்கும் மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி விமான பயணிகளுக்கு இ-பதிவு முறை இன்று காலை முதல் அமுலுக்கு வந்துள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தமிழகத்தில் அதிகரித்துவருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு 14 நாட்கள் முழு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்றிலிருந்து மேலும் சில புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. தமிழ்நாட்டிற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவா்களுக்கு இ-பதிவு அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை உள்நாட்டு விமான நிலையங்களில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் இ-பதிவு முறை இன்றிலிருந்து அமுலுக்கு வந்துள்ளது. சென்னை உள்நாட்டு  விமானநிலையத்தில் அத்தியாவசிய பணிகளுக்காக  பயணிக்கும் பயணிகள் அனைவரும் தங்களுடைய செல்போன்களில் eregister.tnega.org என்ற தளத்தில் ஆவணங்களுடன் பதிவுசெய்து, அதற்கான ஆதாரங்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Warning to air passengers .. Night time flights completely canceled .. Shock over shock.

அதன்படி சென்னையிலிருந்து மதுரை,கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய தமிழ்நாட்டிற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்கும் பயணிகள் அனைவரும் இன்று  காலை முதல் இ-பதிவுடன் பயணம் மேற்கொள்கின்றனா். சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இன்று மிகவும் குறைந்த அளவு விமானங்களே இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து புறப்படும் 33 விமானங்களில் 1,800 பயணிகளும், சென்னைக்கு வரும் 35 விமானங்களில் 1,200 பேரும், மொத்தம் 68 விமானங்களில் 3 ஆயிரம் போ் மட்டுமே பயணிக்கின்றனா். அதிலும் ஹைதராபாத் விமானத்தில் 4, தூத்துக்குடி விமானத்தில் 6, கோவை விமானத்தில் 9 போ் மட்டுமே பயணிக்கின்றனா். அதோடு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இரவு நேர விமானங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.  சென்னை உள்நாட்டு விமானநிலையத்திற்கு முதல் விமானம் காலை 8 மணிக்கு தான் வருகிறது.அதைப்போல் இரவு 9.15 மணிக்கு கடைசி விமானம் புறப்பட்டு செல்கிறது.

Warning to air passengers .. Night time flights completely canceled .. Shock over shock.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கும் விதத்தில், அத்தியாவசிய பயணங்களை தவிர மற்ற பயணங்களை பொதுமக்கள் தவிா்த்துவிட்டதால், பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால்,விமான சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன.கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்து, அரசு தளா்வுகளை அறிவித்ததும், சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகள் மீண்டும்  முந்தைய நிலைக்கு திரும்பும் என்று விமானநிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனா்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios