இன்னொரு செருப்பு வரும்..! அடுத்த பூகம்பத்தை கிளப்பிய கமல்..! 

நடிகர் பார்திபவன் நடிக்கும் ஒத்த செருப்பு சைஸ் 7.. திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசும்போது....

"ஒரு சமயத்தில் காந்தி ரயிலில் பயணிக்கும் போது தவறுதலாக அவருடைய ஒரு செருப்பு கீழே விழுந்துவிட்டது. பின்னர் என்ன செய்வது என்று சற்றும் யோசிக்காமல் அடுத்த செருப்பையும் எடுத்து அதனை கீழே போட்டார். ஏன் இன்னொரு செருப்பையும் கழட்டிப் போட்டார் எனக் கேட்கப்பட்டபோது, ஒரு செருப்பை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இந்த செருப்பையும் கழட்டி போட்டால், யாருக்காவது அது உதவும் அல்லவா? என தெரிவித்தார்... அந்த வகையில் தற்போது ஒரு செருப்பு வந்துவிட்டது... இன்னொரு செருப்பு வந்து சேரும் என குறிப்பிட்டார்.

கமல் ஏன் இன்னொரு செருப்பு வந்து சேரும் என தெரிவித்துள்ளார் என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. அதற்கு பதில் கீழே..
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து; அவர் பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்து இருந்தார். இதனால் அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனக்குரல் எழுந்தது. அதன் பின் அவர் கலந்து கொண்ட இன்னொரு பிரச்சாரக் கூட்டத்தில், பொதுமக்களில் சிலர் அவர் வந்த வாகனத்தின் மீது செருப்பு வீசி எறிந்தனர்.

இதனை மனதில் வைத்துக் கொண்டு தற்போது இவ்வாறு உரை நிகழ்த்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதன்படி பார்த்தால் ஏற்கனவே ஒரு செருப்பு வந்து விட்டது என்றும் இன்னொரு செருப்பு வரும் என்பதை குறிக்கும் வகையில் "ஒத்த செருப்பு சைஸ்7 "ஒரு திரைப்படத்தை குறிப்பிட்டு பேசியுள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது

மேலும் தொடர்ந்து பேசிய கமல்,

காந்தி வரலாறு என்பது நான் திரும்ப திரும்ப படிக்கும் வரலாறு. காந்தியின் ரசிகன் நான். ஹே ராம் படத்தில் நான் காந்தியின் செருப்பை எடுத்து வருவேன். காந்தி எனது ஹீரோ.. நான் ஈரோவை மாற்ற முடியாது.. அதே சமயத்தில் வில்லனை ஹீரோ வாக ஏற்றுக்கொள்ள முடியாது. இப்போது ஒற்றை செருப்பு என்னிடம் வந்து விட்டது; இன்னும் ஒரு செருப்பு வரும் என பேசினார்.